எஸ்.பி.பி உடல்நிலையில் முன்னேற்றம்: சரண் வீடியோ

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் இன்று வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

sp balasubrahmanyam, singer sp balasubrahmanyam, sp balasubrahmanyam health condition getting development, spb health condition getting better, எஸ்பிபி, எஸ்பி பாலசுப்ரமணியம், எஸ்பிபி உடல்நிலையில் முன்னேற்றம், சரண் வீடியோ, sbp health, spb charan video, spb son charan video, spb health getting better, coronavirus, covid-19
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருடைய மகன் எஸ்.பி.பி. சரண் இன்று வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம். தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் தான் விரைவில் குணமடைந்து வருவேன் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, நேற்று முன் தினம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று செய்திகள் வெளியானது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வர வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வதாக சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.

இதையடுத்து, இன்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் சரண் தனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். மருத்துவக் குழுவினர் தொடர்ந்து சிறப்பாக சிகிச்சை அளித்துவருகின்றன. மேலும், தனது தந்தை நிச்சயமாக விரைவில் குணமடைவார் என்றும் அனைவரது அன்புக்கும் குடும்பத்தினர் சார்பில் நன்றி சரண் நன்றி தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Singer sp balasubrahmanyam health condition getting development his son charan says by video

Next Story
‘தமிழா தமிழா நாளை நம் நாளே’ 65 பாடகர்கள் சேர்ந்து பாடிய ஒன்றிணைவோம் ஆல்பம்thamizha thamizha song, ar rahman music, sp balasubhramanyam, shankar mahadevan, Together As One,தமிழா தமிழா நாளை நம் நாளே, 65 பாடகர்கள், ஏ.ஆர்.ரஹ்மான், எஸ்பி பாலசுப்ரமணியம், ஷங்கர் மகாதேவன், United Singers Charitable Trust, 65 Singers, 5 Languages, One Nation, One Song, roja, thamizha thamizha naalai nam naale
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com