‘என் கடைசி பாடலையும் எஸ்.பி.பி-தான் பாட வேண்டும்’ - கவிஞர் வைரமுத்து உருக்கம்
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என கவிஞர் வைரமுத்து, ‘என் கடைசி பாடலையும் எஸ்.பி.பி-தான் பாட வேண்டும்’ என்று உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என கவிஞர் வைரமுத்து, ‘என் கடைசி பாடலையும் எஸ்.பி.பி-தான் பாட வேண்டும்’ என்று உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலையில், எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என கவிஞர் வைரமுத்து, ‘என் கடைசி பாடலையும் எஸ்.பி.பி-தான் பாட வேண்டும்’ என்று உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து அவர் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டபோது, எஸ்.பி.பி தான் விரைவில் குணமடைந்து வருவேன் என்று கூறி வீடியோ வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து, இரண்டு நாட்களுக்கு முன்பு, எஸ்.பி.பி-யின் உடல் நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தமிழ் சினிமா உலகம் அதிர்ச்சியில் ஆழ்ந்தது. 40 ஆண்டுகளாக இசை ரசிகர்களை தனது கந்தர்வக் குரலால் மகிழச் செய்த எஸ்.பி.பி கொரோனா தொர்றில் இருந்து குணமடைந்து வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.
எஸ்.பி.பி- நீண்ட கால நண்பரான இசையமைப்பாளர் இளையராஜா, எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என்று வீடியோ வெளியிட்டனர். நடிகர்கள் ரஜினி, கமல், மோகன் உள்ளிட்டோரும் எஸ்.பி.பி விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக தெரிவித்தனர்.
Advertisment
Advertisements
நேற்று, எஸ்.பி.பி-யின் மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ரசிகர்களின் அன்புக்கு தனது குடும்பத்தினர் சார்பாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார்.
இந்த நிலையில், எம்.ஜி.எம். மருத்துவமனை எஸ்.பி.பி உடல்நிலை இன்னும் மோசமான நிலையிலேயே இருப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கொரோனா வைரஸ் பாதிப்பால் எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஐசியூ-வில் தொடர்ந்து உயிர் பாதுகாப்பு உதவியுடன் இருக்கிறார். அவருடைய உடல்நிலை மொசமாக உள்ளது. மருத்துவர்கள் நிபுனர் குழு அவருக்கு சிகிச்சை அளிக்கிறது. மருத்துவர்கள் நிபுனர் குழு அவர்களுடைய உடல்நிலை உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.
இதனிடையே, திரைப்பட பாடாலாசிரியர், கவிஞர் வைரமுத்து எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து மீண்டு வர வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தான் எழுதிய முதல் முதல் பாடலை பாடிய எஸ்.பி.பி-தான் தனது கடைசி பாடலையும் பாட வேண்டும் என்று கூறி உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் வைரமுத்து, “எஸ்.பி.பி அவர்களே, எங்கள் வாழ்வின் அன்றாடமே... எங்கள் மூளையில் ஒரு மூலையில் கூடுகட்டிப் பாடும் குயிலே... மீண்டு வரவேண்டும். இசை உலகை நீங்கள் ஆண்டு வர வேண்டும். என் முதல் பாடல் பாடியவன் நீ. என் கடைசி பாடலையும் நீதான் பாட வேண்டும். மேகங்கள் வந்து வந்து போகும். வானம்தான் நிரந்தரம். இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என மாறி மாறி நிகழ்ந்த என் கலை வாழ்வில், மாறாத மகா கலைஞன் நீ!
நீ மீண்டு வருவாய்... இசை உலகை ஆண்டு வருவாய்... இந்த உலகமே உனக்காக வேண்டி நிற்கிறது. இந்த உலகத்துக்கு இன்பம் மட்டுமே கொடுத்து பழகியவன் நீ. துன்பம் கொடுக்க மாட்டாய் என்று எனக்குத் தெரியும்.
பாட்டுக் குயிலே சிறகை விரி, கூண்டை உடை... மீண்டு வா... இசை உலகை ஆண்டு வா... பாட வா....” என்று கூறியுள்ளார்.
மேலும், கவிஞர் வைரமுத்து, பாடல் ராஜாவே என்று எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என்று உருக்கமாக பாடல் பாடியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news