என் கனவு இதுதான், ஆனா எனக்கு புரியாத, தெரியாத பாட்டு பாடி இருக்கேன்; எஸ்.பி.பி சொன்ன உண்மை!

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தனது கனவு குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் தனது கனவு குறித்து பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
spp

என் கனவு இதுதான், ஆனா எனக்கு புரியாத, தெரியாத பாட்டு பாடி இருக்கேன்; எஸ்.பி.பி சொன்ன உண்மை!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பாடகராக வலம் வந்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் . இந்திய திரையுலகில் மிகச் சிறந்த பாடகர்களில் இவரும் ஒருவர். தன்னுடைய குரல் வளத்தால் உணர்வுகளை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

Advertisment

1966-ம் ஆண்டு ஹோட்டல் ரம்பா என்ற படத்தில் பாடல் பாடியிருந்தார். இதுதான் எஸ்.பி.பி தமிழில் பாடகராக அறிமுகமான முதல் படம். ஆனால் இந்த படம் வெளியாகவில்லை. அதன்பிறகு எம்.ஜி.ஆர் நடிப்பில் 1969-ம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் படத்தில் ‘ஆயிரம் நிலவே’ பாடல் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார்.

அதன்பிறகு, எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி ரஜினிகாந்த், கமல்ஹாசன் வரை பல முன்னணி நடிகர்களுக்கு ஹிட் பாடல்களை கொடுத்த எஸ்.பி.பாலசுப்பிரமணியன், எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், தேவா, வித்யாசாகர், உள்ளிட்ட பல்வேறு இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார். 

எஸ்.பி.பாலசுப்ரமணியன் பாடல்கள் எப்போது கேட்டாலும் திகட்டாத ஒரு படைப்பாகும். திரைத்துறையில் மூடிசூடா மன்னனாக திகழ்ந்தார். எஸ்.பி. பாலசுப்ரமணியம், பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடி, கின்னஸ் உலக சாதனையைப் படைத்தவர். 

Advertisment
Advertisements

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தனது குரல் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். பாடகராக மட்டுமன்றி, நடிகராகவும், தயாரிப்பாளராகவும், டப்பிங் கலைஞராகவும் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது கனவுகள் குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “பொறியாளர் ஆக வேண்டும் என்பது தான் எனது கனவு. 60-70 காலக்கட்டத்தில் ஒரு பொறியாளராக உருவெடுத்து அதற்கான ஜீப்பில் இருக்கனும் அதற்கு என்று ஒரு ஓட்டுநர் இருக்கனும் போக வேண்டும் என்பது தான் எனது கனவு.

இசை பத்தி யோசனையை கிடையாது. இசை பத்தி ஒன்னுமே தெரியாது. இன்றைக்கும் ஸ்வரம் எழுத வேண்டும் என்றால் ரொம்ப பொறுமையாக தான் எழுதுவேன். இது ஒன்றுமே தெரியாமல் 50 வருடங்களாக இத்தனை மொழிகளில் எனக்கு புரியாத, தெரியாத கிளாசிகல் பாடல்கள் எல்லாம் என்னை இசையமைப்பாளர்கள் பாட வைத்திருக்கிறார்கள்.

நான் ஒரு பாடகர், பாடல் எனக்கு மிகவும் முக்கியம் என்பதற்காக நான் சன்னியாசியாக இருக்க விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையை காதலிக்கிறேன். யாரும் நம்ப மாட்டார்கள் எனக்கு 35 வருடங்களாக புகைப்பழக்கம் இருந்தது. அதன் பின்பு தான் அதைவிட்டேன்.” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: