'இந்தப் பாட்டு பாடும் போது அழுதுட்டேன்': இசையை சுவாசித்த எஸ்.பி சைலஜா
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களைப் பாடிய பாடகி எஸ்.பி. சைலஜா “இந்த பாட்டு பாடும்போது அழுதுட்டேன்” என்று நேர்காணலில் கூறியுள்ளார். எம்.எஸ்.வி இசையமைத்த அது என்ன பாடல் என்று பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத பல பாடல்களைப் பாடிய பாடகி எஸ்.பி. சைலஜா “இந்த பாட்டு பாடும்போது அழுதுட்டேன்” என்று நேர்காணலில் கூறியுள்ளார். எம்.எஸ்.வி இசையமைத்த அது என்ன பாடல் என்று பார்ப்போம்.
Advertisment
பிரபல பாடகர் மனோ, ஜெயா டிவியில் ‘மனதோடு மனோ’ என்ற இசை நிகழ்ச்சியை நெறியாளராகத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், பழம்பெரும் பாடகி எஸ்.பி சைலஜா பங்கேற்று தனது திரை இசை நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு தனக்கு பிடித்தமான பாடல்களைப் பாடினார்.
தனது 6-வது வயதிலேயே தனது வீட்டில் அல்லது குடும்ப நிகழ்ச்சிகளில் யார் பாட சொன்னாலும் உடனே பாடிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சகோதரியான எஸ்.பி. சைலஜா முதலில் பிறமொழி படங்களில் பாடி வந்த நிலையில், பின்னர்தான் தமிழ் சினிமாவில் பாடத் தொடங்கினார். ‘மனதோடு மனோ’ நிகழ்ச்சியில் தனது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, எந்த வயதில் தமிழ் பாடல்களைக் கேட்டீர்கள் என்று மனோவின் கேள்விக்கு பதிலளித்த பாடகி எஸ்.பி. ஷைலஜா கூறுகையில், “விடுமுறைக்கு அவ்வப்போது சென்னை வந்து போய்க்கொண்டிருப்பேன். அப்போதான் நான் அழகான ஒரு பாட்டு கேட்டேன். அந்த பாட்டு சுசிலா அம்மா பாடியது. அப்படி ஒரு அற்புதமான பாட்டு அது. அந்த பாட்டு எப்போ கேட்டாலும் கண்ணில் தண்ணீர் வந்துடும்” என்று தனக்கு பிடித்த பாடலைக் நினைவு கூர்ந்தார்.
எம்.எஸ்.வி இசையில் உருவான அந்த பாடல், “தென்றலை என் தனிமை கண்டு நின்று போய் விடு” என்று தொடங்கும் அந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்த என்றும் அந்த பாடலை தான் எங்காவது பாட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்துள்ளார். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்துள்ளார்.
அப்போது, நடிகர் ஒயு.ஜீ. மகேந்திரன் வீட்டில் எம்.எஸ்.வி. ஹிட்ஸ் என்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்திருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்ட பாடகி எஸ்.பி. சைலஜா, பாடுவதற்கு அழைக்கபட்டிக்கிறார். அப்போது, எஸ்.பி. சைலஜா, இந்த பாடலை பாடியதாகவும் பாடும்போது தன்னையே அறியாமல் அந்த பாடலின் இசையில் லயித்து கண்களில் தண்ணீர் வந்து அழுதுவிட்டேன் என்று கூறினார்.
அது மட்டுமல்லாம், அந்த பாடலில் மிகவும் மனதைத் தொடும் வரிகளான,
“நாளை இந்த வேலை பார்த்து ஓடி வா நிலா
தென்றலை என் தனிமை கண்டு நின்று போய் விடு
சொல்ல நினைத்த ஆசைகள் சொல்லாமல் போவதென் சொல்ல வந்த நேரத்தில் பொல்லாத நானம் யென்” என்ற பாடலை அற்புதமாகப் பாடுகிறார்.
ஒரு தலைமுறையின் இசைக் குரல் என்று பட்டியலிட்டால் லதா மங்கேஷ்கர், சுசிலா ஜானகி வரிசையில் இடம்பிடித்த எஸ்.பி. சைலஜா இசையை சுவாசித்தவர், இசையாக வாழபவர். அவர் தனது திரை இசை பாடல்களின் அனுபவங்களையும் மற்ற பாடகிகள், பாடகர்கள் உடன் தான் பாடிய பாடல்களையும் பாடி பகிர்ந்துகொண்ட இந்த நிகழ்ச்சியின் வீடியோ ரசிகர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“