பிரதமர் மோடி விருந்தில் இப்படியா…. ம்ம்ம்ம்! – எஸ்.பி.பாலசுப்ரமணியம் அதிருப்தி

ஈநாடு(eenadu) நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவரால்தான் அக்டோபர் 19-ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்

By: November 3, 2019, 3:26:33 PM

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள பேஸ்புக் பதிவு, ‘இது என்னய்யா அக்கிரமமா இருக்குது’ என்று சொல்ல வைத்திருக்கிறது.


மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக டெல்லியில், கடந்த அக்.19ம் தேதி பிரதமர் மோடி தனது வீட்டில், பாலிவுட் பிரபலங்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஷாரூக் கான், அமீர் கான், நடிகைகள் கங்கனா ரணாவத், சோனம் கபூர், இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி, ராஜ்குமார் சந்தோஷி, அஸ்வினி ஐயர் திவாரி, தயாரிப்பாளர்கள் போனி கபூர், ஏக்தா கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “படைப்பாற்றல் சக்தி என்பது மிகவும் அளப்பரியது, அது நமது தேசத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுவது அவசியம். பாலிவுட்டின் முன்னணி பிரபலங்கள் உடனான சந்திப்பு பலனளித்தது. உங்கள் படைப்பு முயற்சிகளை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் தரப்பிலிருந்து உதவுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று பேசியிருந்தார்.

அதேசமயம், காந்தி பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்ள வட இந்திய நடிகர், நடிகைகள் மட்டுமே அழைக்கப்பட்டனர். தென் இந்தியாவில் பல முக்கியப் பிரபலங்கள் இருந்தும் அவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை எனத் தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் மகனுமான ராம் சரண் தேஜாவின் மனைவி உபாசனா குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், காந்தி பிறந்த நாள் விழா தொடர்பாக பின்னணிப் பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈநாடு(eenadu) நிறுவனர் ராமோஜி ராவ்ஜிக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவரால்தான் அக்டோபர் 19-ம் தேதி பிரதமர் இல்லத்தில் நடந்த விழாவில் நான் கலந்துகொண்டேன்.


நாங்கள் அனைவரும் பிரதமர் வீட்டுக்குள் நுழையும்போது எங்கள் செல்போன்களை பாதுகாவலர்கள் வாங்கிக்கொண்டு அதற்கான டோக்கன்களை வழங்கினர். ஆனால், அன்று பிரதமருடன் பல பிரபலங்கள் செல்ஃபி எடுத்துக்கொண்டனர், அதைப் பார்த்து நான் திகைத்தேன். நம்மை ஹ்ம்ம்ம்….. என்று அமைதியாக போக வைக்கும் விஷயம்?” என்று தன் ஆதங்கத்தைப் பகிர்ந்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Singer spb about pm modis dinner for bollywood actors takes selfie

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X