scorecardresearch

நான் காணாமல் போகவில்லை – பாடகி சுசித்ரா

பாடகி சுசித்ரா காணவில்லை என்றும் அவர் மன ரீதியாக தொந்தரவுக்குள்ளாகி இருப்பதாகவும் அவரது சகோதரி சுனிதா புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு நான் காணாமல் போகவில்லை வீட்டுக்கு செல்ல சில மணிநேரம் தாமதமாகிவிட்டது என்று பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.

singer suchitra, suchitra, suchitra missing complaint, பாடகி சுசித்ரா, சுசித்ரா, சுசித்ரா கானவில்லை புகார், suchitra says i am not missing, suchitra few hours late, suchi leaks
singer suchitra, suchitra, suchitra missing complaint, பாடகி சுசித்ரா, சுசித்ரா, சுசித்ரா கானவில்லை புகார், suchitra says i am not missing, suchitra few hours late, suchi leaks

பாடகி சுசித்ரா காணவில்லை என்று அவருடைய சகோதரி புகார் அளித்த நிலையில், தான் காணாமால் போகவில்லை என்று சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட  சுசி லீக்ஸ் புகைப்படங்களால் தமிழ் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், பாடகி சுசித்ரா காணவில்லை என்றும் அவர் மன ரீதியாக தொந்தரவுக்குள்ளாகி இருப்பதாகவும் அவரது சகோதரி சுனிதா புகார் அளித்ததால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.

சினிமா நட்சத்திரங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டு சுசி லீக்ஸ் என பரபரப்பு ஏற்படுத்திய சுசித்ராவுக்கு என்ன ஆனது என்று தெரிந்துகொள்ள சினிமா துறையினரும் சினிமா ரசிகர்களும் ஆவலில் இருந்தனர்.

பாடகி சுசித்ரா காணவில்லை என்று அவரது சகோதரி சுனிதா அளித்த புகாருக்கு சுசித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் இந்த புகாருக்குப்பின் ஒரு சதி இருப்பதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஊடகங்கள் சுசித்ராவை தொடர்புகொண்டு விசாரித்தபோது, “நான் காணாமல் போகவில்லை. நான் சிலமணி நேரம் வீட்டுக்குப் போவதற்கு தாமதமாகிவிட்டது. அதனால், அச்சமடைந்த எனது சகோதரி நான் காணவில்லை என்று புகார் அளித்தார். இப்போது நான் சென்னை அண்ணா நகரில் ஒரு கிளினிக்கில் இருக்கிறேன். அங்கே எனக்கு மனநிலை சரியில்லை என்று கூறுகிறார்கள். இந்த புகாருக்குப் பின்னால் சதி இருப்பதாகவும்” தெரிவித்துள்ளார்.

பாடகி சுசித்ரா காணவில்லை என்று புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து போலிசார் நடத்திய விசாரணையில், சுசித்ரா அவருடைய அம்மா வீட்டில் இருந்து அவருடைய சகோதரி வீட்டுக்கு புறப்புட்டு சென்றபோது, அவர் சில மணி நேரம் எங்கே இருக்கிறார் என்று தெரியாததால் புகார் அளிக்கப்பட்டதாக தெரியவந்தது. மேலும், போலீஸார் சுசித்ரா ஒரு ஸ்டார் ஓட்டலில் இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

இதனால், பாடகி சுசித்ரா காணாமல் போகவில்லை என்று உறுதியாகியுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Singer suchitra missing complaint lodged she says i am not missing