Advertisment
Presenting Partner
Desktop GIF

மதம் பிரச்சனையா? மணமகனின் நிறம் பிரச்சனையா? சுதா ரகுநாதன் மகளின் திருமணத்திற்கு ஏன் இவ்வளவு எதிர்ப்பு!

சுதா ரகுநாதன் குடும்பத்தை வாய்க்கு வந்தப்படி விமர்சிப்பதற்கு கண்ட குரல்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
singer Sudha Ragunathan daughter malavika marriage

singer Sudha Ragunathan daughter malavika marriage

singer Sudha Ragunathan daughter malavika marriage : தமிழ்நாட்டின் பிரபல கர்நாடக இசைப் பாடகராக இருப்பவர் சுதா ரகுநாதன். இவரது மகள் மாளவிகாவிற்கு சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள மணமகன் ஆப்பிரிக்க நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.

Advertisment

மாளவிகாவின் வரவேற்பு பத்திரிக்கையில் தொடங்கிய சர்ச்சை கடந்த 1 வாரமாக ஓய்ந்த பாடில்லை. வரும் ஜூலை 11ஆம் தேதி இரவு 7 மணி முதல் சென்னை மயிலாப்பூர் ஏவிஎம் ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் வரவேற்பு நடைபெறுகிறது. இந்த பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வரும் சுதா ரகுநாதனை தொடர்ந்து வசைப்பாடி வருகிறார்கள் வலதுசாரிகள்.

read more.. மதம் மாறி திருமணம் செய்வதில் தவறேதும் இல்லையே! சுதா ரகுநாதனுக்கு அதிகரிக்கிறது ஆதரவு.

காரணம், சுதா ரகுநாதன் தனது மகளை கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த ஆப்பிரிக்க நாட்டை பூர்விகமாக கொண்ட மைக்கேலுக்கு கல்யாணம் பண்ணி தருவது தான். மாப்பிள்ளையை வரவேற்க சுதா ரகுநாதன் குடும்பம் தயாராக்க இருக்கிறார்கள் ஆனால் சிலர் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு குரல்களை பதிவு செய்து வருவது தான் வருந்த தக்க நிகழ்வு.

singer Sudha Ragunathan daughter marriage singer Sudha Ragunathan daughter

இதனை காரணமாக காட்டி சுதா ரகுநாதனின் இசையில், அவர் செய்து வரும் கலைப்பணியில் கைவைக்க நினைப்பது அவரின் குடும்பத்தாரை வேதனையடைய செய்துள்ளது. சுதாரகுநாதனின் மகள் மதம் மாறி திருமணம் செய்யவுள்ளதால் இனி சுதா ரகுநாதன் கோவில்களில் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது எனவும், சுதா ரகுநாதனின் மருமகன் மைக்கேல் மர்பியின் நிறத்தையும் வைத்து சிலர் சமூகவலைதளங்களில் கிண்டல் பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுதா ரகுநாதனின் மகள் மாளவிகா தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். இவர் மைக்கலை தனது விருப்படி குடும்பத்தாரின் அனுமதியுடன் திருமணம் செய்வது பற்றி ஏகப்பட்ட வாத பிரதிவாதங்கள் ஓடுகிறது. ஒரு புறம் எதிர்ப்பு குரல்கள் மேலூங்க மறுபுறம் பலரின் ஆதரவும் சுதா ரகுநாதன் பக்கம் தான்.

குறிப்பாக வலதுசாரிகள் வசைப்பாடுவது மதம் மாறிய திருமணத்தை விட மணமகனின் நிறத்தை குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது. அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற மைக்கேல் இந்து முறைப்படியான திருமணத்திற்கும் ஓகே சொல்லி இருக்கிறாராம்.

தற்போது வரை திருமணம் எந்த முறைப்படி நடக்கிறது என்ற எந்தவித தகவலும் வெளியாக நிலையில் சுதா ரகுநாதன் குடும்பத்தை வாய்க்கு வந்தப்படி விமர்சிப்பதற்கு கண்ட குரல்கள் வெடித்துள்ளன. திருமணம் என்பது இருமணம் நினைவதே. இதில் இரு மதங்கள் இணைந்தால் தவறேதும் இல்லை என்பது தான் வலதுசாரிகள் வசை மழைக்கு பெரும்பாலனோர் கூறும் பதில்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment