14 வயதில் அறிமுகம், 10 ஆயிரம் பாடல்கள் பாடிய இந்த பாடகி 37 வயதில் மரணம்; இவருக்கு தேசிய விருதை விட கிரிக்கெட் தான் முக்கியமாம்!

இந்த மண்ணுலகை விட்டு சென்றாலும், இசை ரூபத்தில் வாழ்ந்து வரும் பின்னணி பாடகி சுவர்ணலதா. அவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதை அவரே ஒரு பழைய நேர்காணலில் ஷேர் செய்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.

இந்த மண்ணுலகை விட்டு சென்றாலும், இசை ரூபத்தில் வாழ்ந்து வரும் பின்னணி பாடகி சுவர்ணலதா. அவருக்கு கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்குமாம். அதை அவரே ஒரு பழைய நேர்காணலில் ஷேர் செய்துள்ளார். அதை பற்றி பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
download (24)

7000-திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியிருந்தாலும், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் இவர் பாடிய 'எவனோ ஒருவன் வாசிக்கிறான்' என்கிற பாடல்... அந்த புல்லாங்குழலின் இசை மீது அமர்ந்து வெளிப்படுவது நம் உள்ளுணர்வை ஏதோ செய்துவிடும். வெவ்வேறு இடத்தில் பிரிந்திருக்கும் காதலன் - காதலியின் உணவை இந்த பாடல் மூலம் தட்டி எழுப்பி, நம்மை உணர வைத்திருப்பர் சுவர்ணலதா. குறிப்பாக 'இன்னிசை மட்டும் இல்லையென்றால் என்றோ... என்றென்றோ... இறந்திருப்பேன்" என்கிற வரிகளை எவ்வளவு கடினமாய் பாடி இவர் கடந்திருப்பார் என்பது அவர் பாடிய இந்த வரிகள் மூலம் நாம் அறிய முடியும். அவர் வேறு யாரும் இல்லை, பாடகி ஸ்வர்ணலதா தான். 

Advertisment

Screenshot 2025-09-15 145736

தன்னுடைய வாழ்க்கையில் இசைக்காகவே வாழ்ந்து... குடும்பம், குழந்தை, என எதையும் ஏற்படுத்திக் கொள்ளாமல்... இருந்த தேவதையான சுவர்ணலதாவை, ரசிகர்கள் பலரும் இசை பொக்கிஷம் என்றும் ஹம்மிங் குயின் என்றும் வர்ணிப்பது உண்டு.இரண்டு பாடல்களை சினிமாவில் பாடிவிட்டாலே... தலைக்கனத்து இருக்கும் சிலர் மத்தியில், சுவர்ணலதா வித்தியாசமானவர். ரசிகர்கள் மத்தியில் ஒரு வார்த்தை கூட அதிர்ந்து பேசாதவர். 

சுவர்ணலதா 1973 ஆம் ஆண்டு, ஏப்ரல் 29ஆம் தேதி... பாலக்காடு மாவட்டம் சித்தூர் தாலுகா, அத்திக்கோடு பகுதியில் உள்ள கீழப்பாரா என்கிற கிராமத்தில் சேருகுட்டி - கல்யாணி ஆகியோருக்கு கடைசி மகளாக பிறந்தவர். இவரின் தந்தை செருக்குட்டு ஒரு பாடகர். ஹார்மோனியம் வாசிப்பதில் கைதேர்ந்தவர். இவரின் தாயாருக்கும், இசையில் ஆர்வம் அதிகம் இருந்ததால், சிறுவயதில் இருந்தே சுவர்ணலதாவுக்கு  இசை பழகிப்போன ஒன்றாக இருந்தது. அதேபோல் சிறுவயதில் இருந்தே இசையை நன்கு கற்று வந்தார். தன் தந்தையிடமும், சரோஜா எனும் தன்னுடைய மூத்த சகோதரி இடமும் பாடுவதற்கும்... ஹார்மோனியம் வாசிப்பதற்கும் பயிற்சி பெற்றார் சுவர்ணலதா.

இவரின் திறமையை மேலும் மேம்படுத்த அந்த கிராமத்தில் இருந்து சந்திரவதி  எனும் நகருக்கு இவருடைய குடும்பமே இடப்பெயர்ந்தனர். சுவர்ணலதா பாடுவதை கேட்ட அந்த ஊர் மக்கள், இவரை பாராட்டியது மட்டுமின்றி அவரை திரையுலகில் பாட வைக்க முயற்சி செய்யுங்கள்... இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது என ஊர் மக்கள் அனைவரும் கூறியதை கேட்டு... சுவர்ணலதாவை பாடகியாக்கும் முயற்சியில் அங்கிருந்து இவருடைய குடும்பமே சென்னைக்கு குடிபெயர்ந்தனர்.

Advertisment
Advertisements

சுவர்ணலதா, சென்னைக்கு வந்ததும் மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதனை சந்தித்து பாட வாய்ப்பு கேட்டார். அவரது அழகிய குரலால் கவரப்பட்ட எம்.எஸ்.வி, 'நீதிக்கு தண்டனை' படத்தில் ஏசுதாசுடன் மகாகவி பாரதியார் பாடல் "சின்னஞ்சிறு கிளியே" பாட வாய்ப்பு அளித்தார். இது சுவர்ணலதாவின் முதல் சினிமா பாடலாகும், அப்போது அவருக்கு 14 வயதே. பின்னர் இளையராஜா அவரை 'குரு சிஷ்யன்' படத்தில் பாடவைத்து, அவர் தொடர்ந்து பல பாடல்களைப் பாடி புகழ்பெற்றார்.

சுவர்ணலதா 20 வயதுக்குள் கலைமாமணி விருது பெற்றுத் தேர்ந்த பின்னணி பாடகியாக உருவெடுத்தார். பல ஹிட் பாடல்களைப் பாடி தேசிய, மாநில மற்றும் பல விருதுகளை வென்றார். இசையமைப்பாளர் நவ்ஷாத் அலியின் பாராட்டையும் பரிசையும் பெற்றார். பெற்றோர்களை இழந்து, திருமணம் ஆகாமல், நுரையீரல் பிரச்சனையுடன் வாழ்ந்த அவர், இறுதியில் பேச முடியாத நிலையை எதிர்கொண்டார்.

இவர் வாழ்க்கையில் எதனை சோகங்கள் இருந்தாலும் அவருக்கு ரொம்ப பிடித்தமான ஒரு விஷயம் என்னவென்றால் அது கிரிக்கெட் ஆம். அதை பற்றி ஒரு நேர்காணலில் யுகி சேது கேட்டார். "தேசிய விருதை பற்றி பேசுவதற்கு வீடு வாசலில் ஆட்கள் இருக்கும் போது கூட வெயிட் பண்ண சொல்லி விட்டு கிரிக்கெட் வேர்ல்ட் கப் பார்த்தீர்கள் என்று கேள்விப்பட்டோம். அது உண்மையா?" என்று கேட்டார்.  அதை பற்றி ஸ்வர்ணலதா பேசுகையில், "ஆமாம் எனக்கு கிரிக்கெட் என்றால் ரொம்ப பிடிக்கும்." என்று சிரித்துக்கொண்டே பேசியிருப்பார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: