எளிமையாக நடந்த வைக்கம் விஜயலட்சுமி திருமணம்… மாப்பிள்ளை இவர் தான்

தமிழ் திரையுலகில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடியிருக்கும் பாடகி வைக்கம் விஜயலட்சுமி மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் அனூப்க்கும் இன்று திருமணம் நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கண் பார்வை இல்லாத நிலையிலும், அதனை…

By: October 22, 2018, 5:38:58 PM

தமிழ் திரையுலகில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடியிருக்கும் பாடகி வைக்கம் விஜயலட்சுமி மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் அனூப்க்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

பிரபல பின்னணி பாடகியான வைக்கம் விஜயலக்ஷ்மி, தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் தனது தனித்துவமான குரலால் ரசிகர்களை கவர்ந்தவர். கண் பார்வை இல்லாத நிலையிலும், அதனை குறையாக நினைக்காமல், கேள்வித் திறனால் சங்கீதத்தில் உள்ள சங்கதிகளை தெளிவாக பாடுபபர். பாடல் மட்டுமல்லாது சிறந்த வீணை கலைஞராகவும் விஜயலக்ஷ்மி இருந்து வருகிறார்.

வைக்கம் விஜயலட்சுமி திருமணம்

இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன் கடந்த மாதம் வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு திருமணம் நிச்சயமானது. அதைத் தொடர்ந்து இன்று (அக்.22) வைக்கமில் உள்ள கோவில் ஒன்றில் விஜயலட்சுமி மற்றும் அனூப் திருமணம் நடைபெற்றது.

vaikom vijayalakshmi, வைக்கம் விஜயலட்சுமி

வைக்கம் விஜயலக்ஷ்மி மற்றும் அனூப் தம்பதிக்கு மலையாள மற்றும் தமிழ் திரை பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Singer vaikkom vijayalakshmi married to mimicry artist

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X