Advertisment

‘நீ நான் காதல்’ சீரியலில் ‘கெஸ்ட்’ ஆக அறிமுகமாகும் சிறகடிக்க ஆசை முத்து; புரோமோ வீடியோ வைரல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ முத்து கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனைதைக் கவர்ந்த வெற்றி வசந்த் மற்றொரு சீரியலில் கெஸ்ட் ஆக நடித்துள்ள புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Vetri Vasanth guest

சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ முத்து கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனைதைக் கவர்ந்த வெற்றி வசந்த் மற்றொரு சீரியலில் கெஸ்ட் ஆக அறிமுகம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் ஹீரோ முத்து கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனைதைக் கவர்ந்த வெற்றி வசந்த் விஜய் டிவியின் மற்றொரு சீரியலில் கெஸ்ட் ஆக நடித்துள்ள புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

விஜய் டிவியில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சில சீரியல்கள் ரசிகர்களை ஈர்த்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. அந்த வகையில், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் கலக்கி வருகிறது. இதற்கு சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த்தின் யதார்த்தமான நடிப்பு, ஹீரோயின் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதியின் எளிமையான தோற்றம், சுந்தர்ராஜனின் கிண்டலான நடிப்பு என சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் வெற்றி வசந்த்தின் யதார்த்தமான நடிப்பு, விஜய் சேதுபதியைப் போலவே இருக்கிறது. அவரை சின்னத்திரை விஜய் சேதுபதி என்று சொல்லும் அளவுக்கு அவருடைய நடிப்பு மிகவும் யதார்த்தமாக உள்ளது.

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான வெற்றி வசந்த் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியலில் கெஸ்ட் ஆக நடித்த நிலையில், தற்போது மற்றொரு புதிய தொடரான ‘நீ நான் காதல்’ சீரியலில் கெஸ்ட் ஆக அடித்துள்ளார்.

 

சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் தற்போது  ‘நீ நான் காதல்’ சீரியலில் கெஸ்ட் ரோலில் அறிமுகமாகும் புரோமோ வீடியோ சமூக வலைதளங்களிலும் இணையத்திலும் வைரலாகி  வருகிறது.



கடந்த வாரம், விஜய் டிவியில், மா.ப.க ஆனந்த் தொகுத்து வழங்கும்  ‘அது இது எது’ என்ற நிகழ்ச்சியில் வெற்றி வசந்த், கோமதி பிரியா மற்றும் அனிலா ஸ்ரீகுமார் மூன்று பேரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. 

இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  ‘நீ நான் காதல் ’என்ற சீரியல் புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில், அதில் சிறப்பு விருந்தினராக வெற்றி வசந்த் கலந்து கொண்டுள்ளார். வெற்றி வசந்த் உடனாகா கல்யாணம் சீரியல் நாயகி கெஸ்ட் ஆக வந்துள்ளார். 

விஜய் டிவிய்ல் சிறகடிக்க ஆசை சீரியலில் வெற்றி வசந்த் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவர் அதே விஜய் டிவியில் அடுத்தடுத்து 2 சீரியல்களில் கெஸ்ட் ஆக நடித்துள்ளார். நீ நான் காதல் சீரியலில் வெற்றி வசந்த் கெஸ்ட் ஆக அறிமுகமாகும் புரோமோ வீடியோ வைரலாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment