விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில், ஸ்ருதியின் அம்மா ஹீரோ முத்துவை அவமானப்படுத்துவதற்காக ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் ஃபங்ஷன் வைத்துள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் முத்துவுக்கு ரோஜாப்பூ மாலை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
சிறகடிக்க ஆசை சீரியல் டி.ஆர்.பி-யில் கலக்கி வருகிறது. இதற்கு காரணம், இந்த சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் இயல்பாக நடிக்கும் வெற்றி வசந்த், மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியாவின் எளிமையான நடிப்பு, மாமியார் விஜயா மருமகள்களை பாரபட்சமாக நடத்துவது, அதைவிட இயக்குனர், நடிகர் ஆர். சுந்தர்ராஜனின் கிண்டலான நடிப்பு, வெறும் ஏட்டுக்கல்வியைப் படித்துவிட்டு வேலை செய்ய முடியாத சோம்பேறி மனோஜ் கதாபாத்திரம், ஏற்கெனவே நடந்த திருமணத்தையும் ஒரு குழந்தை இருப்பதையும் மறைத்து மனோஜ்ஜை 2வது திருமணம் செய்துகொண்ட ரோகிணி என இந்த கதாபாத்திரங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
தற்போது, சிறகடிக்க ஆசை சீரியலில், மூன்றாவது மருமகள் ஸ்ருதிக்கு தாலி பிரித்துக் கோர்க்கும் ஃபங்ஷன் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதிலும், ஸ்ருதியின் அம்மா முத்துவை அவமானப்படுத்த வேண்டும் என்றே இந்த ஃபங்ஷனை திட்டமிடுகிறார். மாமியார் விஜயா, முதல் மருமகள் ரோகிணிக்கும் தாலி பிரித்துக் கோர்க்கும் ஃபங்ஷன் நடத்த வேண்டும் என்று கூறுகிறார்.
இப்படி சிறகடிக்க ஆசை சிரியலில் முத்துவை அவமானப்படுத்த திட்டமிடும் எபிசோடு தயாராகிறது என்றால், நிஜத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த்-க்கு ரோஜாப்பூ மாலை போட்டு கேக் வெட்டி பிறந்தநால் கொண்டாடி இருக்கிறார்கள்.
வெற்றி வசந்த் தனது யதார்த்தமான நடிப்பால் சின்னத்திரை விஜய் சேதுபதி என்கிற அளவுக்கு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அவருடைய பிறந்த நாளை சிறகடிக்க ஆசை சீரியல் யூனிட் மகிழ்ச்சியாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.
வெற்றி வசந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ரோகிணி மற்றும் ஸ்ருதிக்கு தாலி பிரித்து கோர்க்கும் பங்க்ஷன் நடைபெற்றிருக்கிறது. இருவரும் கழுத்து நிறைய நகைகளோடும் கன்னத்தில் சந்தனத்தோடும் இருப்பதால் இந்த ஷூட்டிங் முடிவடைந்து விட்டதா என்று ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்திருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பவர்களின் பிறந்தநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, இந்த சீரியலில் மீனாவின் தம்பியாக சத்யா கதாபாத்திரத்தில் வரும் நடிகருக்கு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதற்குப் பிறகு மனோஜின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இப்போத் முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த்தின் பிறந்தநாளைக் கொண்டாடி இருக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“