/indian-express-tamil/media/media_files/ewlHK50AfPaL8aa14Jrs.jpg)
சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகள் கடந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
விஜய் டிவியில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகள் கடந்ததைத் தொடர்ந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் அனைவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
தமிழ் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளில் சீரியல்கள்தான் பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடத்தைப் பிடிப்பதில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி சீரியல்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல், முதலில் சாதாரணமாகத் தொடங்கினாலும், அடுத்தடுத்த எபிசோடுகளில் சுவாரசியமும் விறுவிறுப்பும் கூடி, யாரும் எதிர்பாராத வகையில், முதல் இடத்தைப் பிடித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
முத்து - மீனா ஜோடி ரொமான்ஸ், பாசமான தந்தை, மாமியார் கொடுமை, அண்னன் - தம்பி பிரச்னைகள் என எதார்த்தமான ஒரு மிடில் கிளாஸ் குடும்ப கதை என்பதால் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில், வெற்றி வசந்த், கோமதி, சுந்தரராஜன் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த சீரியலில் ஜோடி முத்து - மீனா ஜோடி ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றனர்.
#SiragadikkaAasai 500 days celebration. pic.twitter.com/90Hmg5KBLG
— Parthiban A (@ParthibanAPN) September 29, 2024
இந்நிலையில் தற்போது சிறகடிக்க ஆசை 500 எபிசோடுகளை கடந்து இருக்கிறது. 500 எபிசோடுகள் என வெற்றிகரமான தருணத்தைக் கொண்டாடும் வகையில், சிறகடிக்க ஆசை சீரியல் குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டில் குழுவினர் பெரிய கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர். இந்த நிகழ்வின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.