Advertisment

சிறகடிக்க ஆசை சீரியல் மாமியார் விஜயா... காதலர் தினத்தில் கணவர் குறித்து நெகிழ்ச்சிப் பதிவு!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதாநாயகன் முத்துவின் அம்மா விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார், காதலர் தினத்தில் தனது கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Anila Sreekumar

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் கதாநாயகன் முத்துவின் அம்மா விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதாநாயகன் முத்துவின் அம்மா விஜயா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை அனிலா ஸ்ரீகுமார், காதலர் தினத்தில் தனது கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.  

Advertisment

விஜய் டிவியில் ரசிகர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் கதாநாயகன் முத்துவின் அம்மாவாகவும் கதாநாயகி மீனாவின் மாமியாராகவும் இருக்கும் விஜயா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை அனிலா ஸ்ரீகுமார், இவர் ஏற்கனவே விஜய் டிவியில், சின்னத்தம்பி, பாவம் கணேசன் போன்ற ஒரு சில சீரியல்களில் அம்மா கேரக்டரில் நடித்து பிரபலமானவர்.

தற்போது, டி.ஆர்.பி.-யில் கலக்கி வரும் விஜய் டிவி சீரியல் ‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் 3 மகன்களில் ஒரு மகனிடம் மட்டும் பாரபட்சமாகவும் அதே போல, ஏழை மருமகள் மீனாவிடம் கடுகடுவென நடந்துகொள்ளும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இவருடைய கணவராக, இயக்குனர், நடிகர் ஆர். சுந்தரராஜன் நடித்து வருகிறார்.

‘சிறகடிக்க ஆசை’ சீரியலில் விஜயாவின் பாரபட்சமான அம்மா, ஏழை மருமகளை மிரட்டும் மாமியார் என இவருடைய நடிப்பு எதார்த்தமாக இருப்பதால், அனிலா ஸ்ரீகுமார் பார்வையாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

Anila Sreekumar

இந்த நிலையில், ‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை அனிலா ஸ்ரீகுமார்,  தன்னுடைய கணவரோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு அவரைப் பற்றி சில தகவல்களையும் தெரிவித்துள்ளார். நடிகை அனிலா ஸ்ரீ தன்னுடைய கணவர் குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Anila Sreekumar

நடிகை அனிலா ஸ்ரீகுமார் கேரளாவைச் சேர்ந்தவர், இவர் கேரளாவில் இருந்து தமிழில் நடிக்க வரும்போது பயந்துகொண்டுதான் வந்திருக்கிறார். இதற்குக் காரணம் இவருக்கு தமிழ் அதிகமாக தெரியாது எனபதுதான். தமிழ் அதிகம் தெரியாது என்பதால், தமிழ் ரசிகர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வி அவர் மனதில் இருந்திருக்கிறது. ஆனால், அனிலா ஸ்ரீகுமார் தமிழ் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளார்.

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் நடிகை அனிலா ஸ்ரீகுமார், பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவர் குமரன் உடன்  எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு உள்ளார்.

Anila Sreekumar

அதில், அனிலா ஸ்ரீ தனது கணவர் குமரனுக்கு காதலர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அனிலா ஸ்ரீகுமாரு-க்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். அவர்களுடன் அனிலா ஸ்ரீ எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Siragadikka Aasai Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment