/indian-express-tamil/media/media_files/4Aj8meAt4FdGWHmiCBjo.jpg)
விஜய் டிவியில் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கதாபாத்திரத்தில் நடிக்கும் வெற்றி வசந்த் தனக்கும் பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவி உடன் திருமணம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளார்.

விஜய் டிவியில் பார்வையாளர்களின் பெரும் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல். இதற்கு காரணம், இந்த சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் கதாபாத்திரங்களாக முத்து - மீனாவாக நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியாதான். அதிலும், முத்துவாக நடிக்கும் வெற்றி வசந்த்தின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை ஈர்த்து வருகிறது. வெற்றி வசந்த் காட்சிகள் வந்தாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகிறார்கள். சிறகடிக்க ஆசை சீரியல் 500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோ வெற்றி வசந்த் தனது திருமணம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெற்றி வசந்த்தை திருமணம் செய்துகொள்ளப் போகும் பெண் யார் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் ஹீரோயின் வைஷ்ணவியைத் தான் திருமணம் செய்ய உள்ளார் என வெற்றி வசந்த் அறிவித்துள்ளார்.
வெற்றி வசந்த் - வைஷ்ணவி இருவருக்கும் இந்த வாரம் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ள வெற்றி வசந்த், ரொமான்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
நிச்சயதார்த்தம் குறித்து வெற்றி வசந்த் கூறுகையில், எப்போதும் ஒன்றாக இருப்போம்.
ஹாய் இன்ஸ்டா குடும்பம் மற்றும் நண்பர்கள்
இதை உங்கள் அனைவருக்கும் சொல்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், நாங்கள் இருவரும் இந்த வாரத்தில் நிச்சயதார்த்தம் செய்யப் போகிறோம். உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும், ஆசிகளுக்கும், பிரார்த்தனைகளுக்கும் முன்கூட்டியே நன்றி.
இரண்டாவது மாத காதல் கொண்டாட்டத்துக்கு வாழ்த்துக்கள் மா. என்றென்றும் ஒன்றாக மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்கி வாழ்வோம். லவ் யூ.” என்று பதிவிட்டுள்ளார்.
விரைவில் திருமனம் செய்ய உள்ள வெற்றி வசந்த்திற்கும் வைஷ்ணவிக்கும் ரசிகர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.