Advertisment
Presenting Partner
Desktop GIF

ரூ4 கோடி பாக்கி... ஞானவேல் ராஜா மீது சிவகார்த்திகேயன் வழக்கு!

சம்பள பாக்கி விவகாரம்; தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

author-image
WebDesk
New Update
Sivakarthikeyan meets his family relations, actor Sivakarthikeyan, சிவகார்த்திகேயன் 3 தலைமுறை கொடிவழி சந்திப்பு, சிகார்த்திகேயன், வேர்களைத்தேடி மகிழும் சிவகார்த்திகேயன், நடிகர் சிவகார்த்திகேயன், Sivakarthikeyan meets family relations, Tamil cinema, Sivakarthikeyan, Sivakarthikeyan meets family root relations

Siva Karthikeyan files case against producer studio green KE Gnanavel Raja: சம்பள பாக்கியை தரக்கோரி தயாரிப்பாளர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisment

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்துக் கொண்டிருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து சினிமாவுக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது முன்னனி நடிகராக உள்ளார். இவர் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், வேலைக்காரன், டாக்டர் உள்ளிட்ட பல படங்கள் பெரிய வரவேற்பை பெற்றன. தற்போது அயலான், டான் ஆகியப் படங்களில் நடித்து முடித்துள்ளார்.

இந்தநிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ஸ்டூடியோ கிரீன் கே.இ.ஞானவேல் ராஜா தனக்கு சம்பள பாக்கி ரூ.4 கோடி தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இந்தப்படத்தை இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருந்தார். நயன்தாரா கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்து இருந்தார். மிஸ்டர் லோக்கல் திரைப்படம் வெளியாகி சுமாராக ஓடியது. இந்த மிஸ்டர் லோக்கல் திரைப்படத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ரூ.15 கோடி சம்பளமாக பேசப்பட்டது. ஆனால் பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ.11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்துள்ளதால் ரூ.4 கோடி பாக்கி உள்ளது. மேலும் சம்பளமாக கொடுக்கப்பட்ட ரூ.11 கோடிக்கு டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை வருமான வரித்துறையில் செலுத்தாததால், வருமான வரித்துறையிடம் இருந்து சிவகார்த்திகேயனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: மனைவியை கிண்டல் செய்த கிறிஸ் ராக்கை ஆஸ்கார் மேடையில் அறைந்த வில் ஸ்மித்; ரியல் ஹீரோ என குவியும் பாராட்டு

இதனால், தனது சம்பள பாக்கியான ரூ.4 கோடியை வழங்குவதற்கும், பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை வருமான வரித்துறையில் செலுத்த உத்தரவிடக்கோரியும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்யத் தடை தேவை எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான திரையரங்க வெளியீடு, ஓடிடி வெளியீடுகளுக்கு தடை தேவை எனவும் சிவகார்த்திகேயன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் தரப்பில் தொடரப்பட்ட இந்த வழக்கு நாளை மறுநாள் (மார்ச் 31) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உயர்நீதிமன்ற நீதிபதி எம்.சுந்தர் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Sivakarthikeyan Studio Green
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment