இந்த டிவிஸ்டை எதிர்பார்க்கல… ஷிவாங்கி ஆங்கரிங் பண்ணப் போறது வேற நிகழ்ச்சி: வீடியோ
இதற்கு முன் ரக்ஷன் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி வந்துள்ளார். ஷிவாங்கி ஆங்கரிங் தகவலில் இந்த டிவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
இதற்கு முன் ரக்ஷன் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி வந்துள்ளார். ஷிவாங்கி ஆங்கரிங் தகவலில் இந்த டிவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி குக் வித் கோமாளியில் பெரிய அளவில் பிரபலமாகியுள்ள ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகியுள்ளார் என்ற தகவல் வெளியான நிலையில், அவர் அந்த நிகழ்ச்சியை ஆங்கரிங் செய்யவில்லை என்று ஒரு டிவிஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.
Advertisment
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான சிவாங்கி அந்த நிகழ்ச்சியில் அவர் நன்றாக பாடியதோடு, நகைச்சுவையையும் வெளிப்படுத்தினார். இதையடுத்து, ஷிவாங்கியை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடையச் செய்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி, புகழ், அஸ்வின் காமெடி கலாட்டாகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது. ஷிவாங்கி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் ‘டான்’ உள்ளிட்ட சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை சினிமாவிலும் களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் ஷிவானி, தான் அறிமுகமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராகியுள்ளதாக அவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஒரு புகைப்படம் மூலம் ரசிகர்களால் புரிந்துகொள்ளப்பட்டது. இதற்கு காரணம், விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளரான பிரியங்கா, விஜய் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளதால் அவர் ன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. அதனால், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பிரியங்காவுக்கு பதிலாக ஷிவாங்கி தொகுத்து வழங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை ஷிவாங்கி தொகுத்து வழங்கவிலை என்று தெரியவந்துள்ளது.
Advertisment
Advertisements
ஷிவாங்கி ஆங்கரிங் பண்ணப் போறது பிரியங்காவிற்கு பதில்தான், ஆனால், அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி அல்ல. பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி தொகுத்து வழங்க வந்தது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி கிடையாது, காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சி தான்.
காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை இதற்கு முன் ரக்ஷன் மற்றும் பிரியங்கா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வந்த நிலையில், தற்போது பிரியங்காவிற்கு பதிலாக ஷிவாங்கி வந்துள்ளார். ஷிவாங்கி ஆங்கரிங் தகவலில் இந்த டிவிஸ்ட்டை யாரும் எதிர்பார்க்கவே இல்லை.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"