விஜய் டிவியில் ஷிவாங்கிக்கு 'சூப்பர்' புரொமோஷன்… அப்போ பிரியங்கா பற்றிய வதந்தி உண்மைதானா?
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமான ஷிவாங்கி அந்த நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக சூப்பர் புரோமோஷன் அடைந்துள்ளார். இதனால்,பிரியங்கா பற்றிய வதந்தி உண்மைதானா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானார். அந்த நிகழ்ச்சியில் அவர் நன்றாக பாடியதோடு, நகைச்சுவையையும் வெளிப்படுத்தினார். இதையடுத்து, ஷிவாங்கியை பட்டி தொட்டியெங்கும் பிரபலமடையச் செய்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஷிவாங்கி, புகழ், அஸ்வின் காமெடி கலாட்டாகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.
Advertisment
ஷிவாங்கியின் யதார்த்தமான காமெடி, யாரையும் காயப்படுத்தாத நகைச்சுவை எல்லாம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இதனால், ரசிகர்கல் பலரும் ஷிவாங்கியை அவர்கள் வீட்டு பெண்ணாகவே பார்க்க துவங்கினர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஷிவாங்கி, நடிகர் சிவகார்த்திகேயனுடன் 'டான்' உள்ளிட்ட சில படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை சினிமாவிலும் களம் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் ஷிவானி, தான் அறிமுகமான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக மாறியுள்ளார். இது குறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.
Advertisment
Advertisement
அதில், ஆங்கர் ஷிவாங்கி என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது. விஜய் டிவ்யில் நான் போட்டியாளராக தொடங்கிய அதே தளத்தில் இரண்டு நாண்டுகளுக்கு பிறகு நான் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஷிவாங்கியின் இந்த பதிவு மூலம், இது நாள் வரை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த பிரியங்காவுக்கு என்ன ஆனது என்று கேள்வியும் எழுந்துள்ளது. அதே போல, விஜய் டிவி ‘ஸ்டார்ட் மியூசிக்’ நிகழ்ச்சியைக்கூட மிக அண்மையில் பிரியங்கா இல்லாமல் மா.கா.பா.ஆனந்த் தொகுத்து வழங்கினார்.
இதனால், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி வரும் நிலையில், அவர், தன்னை தனிமைப்படுத்திக்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் போட்டியாளராக அறிமகமான ஷிவாங்கி இப்போது அதே நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக 'சூப்பர்' புரொமோஷன் பெற்றுள்லார். இதனால், சூப்பர் சிங்கர் தொகுப்பாளினியாக இருந்த பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போகிறார் என்று சொல்லப்படும் வதந்தி உண்மைதானா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”