தமிழ் திரையுலகின் ஜாம்வான், நடிகர் சிவாஜி கணேசன் 91வது பிறந்தநாள் இன்று. அவரின் வியக்க வைக்கும் நடிப்பின் தொகுப்பை இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ் உங்களுக்காக வழங்குகிறது.
Advertisment
1928ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி, தஞ்சாவூர் சூரக்கோட்டையில் சின்னைய்யா பிள்ளை மற்றும் ராஜமணி அம்மாள் தம்பதிக்கு பிறந்தார். 7 வயதில் தனது தந்தைக்கு தெரியாமல் ரகசியமாக நாடகங்களில் நடிக்க தொடங்கினார். பின்னர் 10 வயதில், பெற்றோர்களை பிரிந்து திருச்சிக்கு சென்று அங்குள்ள சங்கிலியாண்டபுரத்தில் இருந்த நாடக கம்பெனியில் சேர்ந்தார்.
பரதநாட்டியம், கதக், மனிப்புரி ஆகிய நடனங்களில் தேர்ச்சி பெற்ற சிவாஜி, முதன் முதலில் சத்திரபதி சிவாஜியின் கதாபாத்திரத்தில் ‘சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்’ என்ற நாடகத்தில் நடித்து அனைவரையும் வியக்க வைத்தார். அன்று முதலே இவருக்கு சிவாஜி கணேசன் என்ற பெயர் கிடைத்தது.
Advertisment
Advertisements
சிவாஜி கணேசன் மறக்க முடியாது நடிப்பு காட்சிகள் :
சினிமாவில் பராசக்தி என்ற படத்தின் மூலம், 1952ம் ஆண்டு அறிமுகமான இவர், கடைசியாக 1999ம் வெளியான படையப்பா படம் வரை மக்களை மகிழ்விக்கும் கலைஞனாக வாழ்ந்தார். செவேலியர் சிவாஜி கணேசன் என்றும் அழைக்கப்படும் இவரின் வியக்க வைக்கும் நடிப்புகளின் தொகுப்பு இதோ.