Advertisment

தேடிவந்த சிவாஜி பட தயாரிப்பாளர்... வாலியுடன் எம்.ஜி.ஆர் மகிழ்ச்சி உச்சத்தில் எடுத்த போட்டோ இது!

சிவாஜி கணேசனுக்கு வரிசையாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பி.ஆர். பந்துலு, ஒரு படம் இயக்க வாய்ப்பு கேட்டு தேடி வந்ததால், ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியின் உச்சத்தில், வாலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சாட்சியாக உள்ளது.

author-image
WebDesk
New Update
vaali mgr 2x

இந்த புகைப்படமே எம்.ஜி.ஆர் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது.

சிவாஜி கணேசனுக்கு வரிசையாக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குநர் பி.ஆர். பந்துலு அதிலிருந்து மீள்வதற்கு நண்பர்களின் அறிவுரையின் பேரில், எம்.ஜி.ஆருக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பு கேட்டு தேடி வந்ததால் எம்.ஜி.ஆர் மகிழ்ச்சியின் உச்சத்தில், வாலியுடன் எம்.ஜி.ஆர் எடுத்துக்கொண்ட புகைப்படம் எம்.ஜி.ஆரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதாக உள்ளது.

Advertisment

தமிழ் சினிமாவில் நிஜமான இரட்டை எதிர் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் எனத் தொடங்குகிறது. நடிப்பு என்றால் அது சிவாஜி கணேசன் என்று புகழப்பட்டாலும், ரசிகர்கள் எண்ணிக்கை என்னவோ எம்.ஜி.ஆருகுத்தான் அதிகம். சிவாஜி கணேசன் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான இயக்குநர்களும் படங்களும் அமைந்தன. அந்த வகையில், சிவாஜி கணேசனுக்கு பழம்பெரும் இயக்குநர் பி.ஆர். பந்துலு வரிசையாக பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். கப்பலோட்டிய தமிழன், கர்ணன் என பல படங்களை இயக்கியுள்ளார். ஏதோ சூழ்நிலை காரணமாக இயக்குநர் பி.ஆர். பந்துலுவுக்கு நிறைய கடன் ஏற்பட்டுவிட்டது. இந்த கடன்களில் இருந்து மீள்வதற்கு, நீங்கள் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் பண்ணுங்கள். உங்களுடைய கடன் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நண்பர்கள் அவருக்கு அறிவுரை கூறியுள்ளனர். 

பி.ஆர். பந்துலு தான் தொடர்ந்து சிவாஜி கணேசனுக்கு படங்கள் இயக்கியுள்ளேன். நான் சிவாஜி கணேசன் முகாம் இயக்குநர் என்று பார்க்கப்படுகிறேன். நான் போய் எப்படி எம்.ஜி.ஆர் இடம் வாய்ப்பு கேட்பது, அவர் எப்படி ஒப்புக்கொள்வார் என்று கேட்டுள்ளார். அதற்கு, நண்பர்கள், அப்படி இல்லை எம்.ஜி.ஆர் உங்களைப் பற்றி நல்ல மரியாதை வைத்துள்ளார், நீங்கள் சென்று போய் பாருங்கள் என்று கூறியுள்ளனர். 

பி.ஆர். பந்துலுவும் சரி என்று, எம்.ஜி.ஆருக்கான ஒரு பிரமாதமான கதையைத் தயார் செய்துவிட்டு,  எம்.ஜி.ஆரை சந்தித்துப் பேசியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு ஒரே சந்தோஷம். சிவாஜி கணேசன் படங்களை இயக்கிய மிகப்பெரிய இயக்குநர் தனது படங்களை இயக்க வந்ததால் உடனே ஒப்புக்கொண்டதோடு, கதையைக் கேட்டு பிடித்துப்போக இன்னும் சந்தோஷமாகிவிட்டார். உடனே, நீங்கள் படத்திற்கான வேலைகளைத் தொடங்குங்கள் என்று கூறியிருக்கிறார். 

Advertisment
Advertisement

இயக்குநர் பி.ஆர். பந்துலுவும் மகிழ்ச்சியுடன் சென்று படத்திற்கான வேலைகளைத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில் தனது படங்களுக்கு அற்புதமான பாடல்களை எழுதிய கவிஞர் வாலியை அழைத்த எம்.ஜி.ஆர், இயக்குநர் பி.ஆர். பந்துலு இயக்கத்தில் நடிக்க உள்ளதை பகிர்ந்துகொண்டுள்ளார். அதுமட்டுமல்ல மகிழ்ச்சியின் உச்சத்தில், கவிஞர் வாலியின் தோளில் கைபோட்டு இறுக்கி அணைத்தபடி எம்.ஜி.ஆர் போட்டோ எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படமே எம்.ஜி.ஆர் எந்த அளவுக்கு சந்தோஷமாக இருந்தார் என்பதை வெளிப்படுத்துவதாக உள்ளது. 


இயக்குநர் பி.ஆர். பந்துலு இயக்கத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார் நடித்த படம்தான் ஆயிரத்தில் ஒருவன், இந்த படத்தில் கவிஞர் வாலி 3 பாடல்களை எழுதினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Mgr
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment