/indian-express-tamil/media/media_files/zTtYJXwm65DACaxASD0f.jpg)
நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பதில் வல்லவரான சிவாஜிக்கு பந்தயம் வைத்த இயக்குனர்; சொன்னபடி செய்தாரா சிவாஜி?
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பதில் மட்டுமல்ல நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பதிலும் வல்லவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகர்களில் ஒருவரான மறைந்த சிவாஜி கணேசன் நடிப்பு பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அவர் முத்தம் கொடுப்பதிலும் வல்லவர் என்பது பலருக்கும் தெரியாது.
சிவாஜி கணேசன் நடிகைகளுக்கு முத்தம் கொடுப்பதில் எப்படி வல்லவர் என்பதை சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப் தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.
வீடியோவின்படி, சிவாஜி முத்தம் கொடுப்பதில் மன்னாதி மன்னன். எந்த நடிகையாக இருந்தாலும் சிவாஜி முத்தம் கொடுத்திருப்பார். சிவாஜியின் ரொமாண்டிக் காட்சிகளை கவனித்தால், நடிகைகளுக்கு முதுகில், காதில், இடுப்பில், கைகளில், கழுத்தில் என பல இடங்களில் சிவாஜி முத்தம் கொடுத்திருப்பது தெரியும். வசந்த மாளிகை படத்தில் நடிகை கே.ஆர்.விஜயாவுக்கு கழுத்தில் முத்தம் கொடுத்திருப்பார். இந்தப் போஸ்டரைப் பார்த்தே படம் பார்க்க வந்தவர்கள் நிறைய பேர்.
இந்தநிலையில், நடிகரும் இயக்குனருமான பாலாஜி, நடிகைகளுக்கு பாடல் காட்சியில் முத்தம் கொடுத்துவிடுகிறீர்கள், நிஜத்தில் முடிந்தால் கொடுங்கள், 500 ரூபாய் தருகிறேன் என சிவாஜியிடம் பந்தயம் வைத்தார். அப்போது சூட்டிங்கில் இருந்த நடிகை வாணி ஸ்ரீ-யிடம் பேச்சுக் கொடுத்தவாறே கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்து விடுகிறார் சிவாஜி. இதைப் பார்த்த பாலாஜி, நீ கில்லாடிடா எனக் கூறி, 500 ரூபாய் கொடுத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)

Follow Us