சிவாஜியுடன் ஜெயலலிதாவின் தாயார் நடித்த படம்; கலைஞர் வசனம்; மறக்க முடியாத மெகா ஹிட் படத்தின் கதை
சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
சிவாஜி கணேசனின் அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்த படம், கலைஞர் கருணாநிதி வசனத்தில், எழுத்தாளர் லட்சுமியின் நாவல் படமாக்கப்பட்டது தான் ‘இருவர் உள்ளம்’ என்பது இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடதக்கது.
Advertisment
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகன் சிவாஜி மிகவும் பணக்காரர். அதிக பணம் உள்ள குடும்பத்தை சேர்ந்தவர். இதனால் இவர் உல்லாசமாக இருப்பார். எல்லா பெண்களுடனும் பழங்குவார். எப்போதும் நண்பர்கள் சூழ இருப்பார்.
மருத்துவம் படித்துக்கொண்டிருக்கும் சிவாஜி, சென்னைக்கு வந்து மாமா நிறுவனத்தை கவனித்துகொள்வார். இந்நிலையில் அப்போது சரோஜா தேவியை பார்ப்பார்.
இதனால் மனம்மாறி சரோஜா தேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார். ஆனால் சரோஜா தேவி இவரது பழைய குணத்தைப் பார்த்து அவரை வெறுப்பார். இந்த நேரத்தில் சிவாஜியின் தங்கைக்கு டியூஷன் சொல்லிக்கொடுக்க சரோஜாதேவி வருவார். இந்நிலையில் இதை பார்க்கும் சிவாஜியின் அம்மா- அப்பா இருவரும், சிவாஜிக்கும் சரோஜா தேவிக்கும் பொருத்தம் நன்றாக இருக்கும் என்று இருவருக்கும் திருமணம் செய்து வைப்பார்கள்.
Advertisment
Advertisements
திருமணம் ஆனா பிறகும் கூட, சரோஜாதேவிக்கு நம்பிக்கை ஏற்படாது. அதன் பின்னர் சில திடுக்கிடும் திருப்பங்கள் நடைபெறும். சிவாஜி மீது கொலைப் பழி போடப்படும்? யார் உண்மையான கொலையாளி ? கணவன் மனைவி இணைவார்களா? என்பதுதான் மீதிக் கதை.
இந்த படத்தின் மிகப் பெரிய பலம் எழுத்தாளர் லட்சுமியின் கதை என்று கூறலாம். லட்சிமி எழுதிய நாவலுக்கு மிக அருமையாக கலைஞர் கருணாநிதி வனம் எழுதியிருப்பார். ஆங்காங்கே தன் குசும்புத்தனத்தையும் நையாண்டியையும் நக்கலையும் அவர் வசனத்தில் இணைத்து இருப்பார் என்பதும் அவை படம் பார்ப்பவர்களை ஆச்சிரியப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
சரோஜாதேவி, சிவாஜிகணேஷன் இருவரும் போட்டிப் போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள். இந்த படத்தில் சிவாஜி கணேசன் அப்பாவாக எஸ்.வி.ரங்காராவ், அம்மாவாக ஜெயலலிதாவின் அம்மா சந்தியா நடித்திருப்பார்கள். இருவருமே மகன் மீது பாசத்தை பொழியும் அற்புதமான கேரக்டரில் நடித்திருந்தார்கள் என்பதும் குறிப்பாக சந்தியாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் வெளிப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்திற்கு கேவி மகாதேவன் இசையமைத்திருந்தார். பறவைகள் பலவிதம் இதயவீணை, அழுகு சிரிக்கின்றது. நதி எங்கே போகிறது போன்ற பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றன என்பதும் அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியன என்பதும் அனைத்து பாடல்களையும் கவியரசு கண்ணதாசன் எழுதியிருப்பார் என்பது குறிப்பிடதக்கது.
1963ம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளியான ’இருவர் உள்ளம்’ வெளியாகி 60 ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போதும் இந்த படத்தின் கதை பல படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். திருந்தி வாழ்பவர்களுக்கு சமூகம் வாய்ப்பளிக்க வேண்டும். சந்தர்ப்பமும் சூழ்நிலையும் கைகோர்த்துக் கொண்டால் நல்லவனை கூட கெட்டவனாகதான் இந்த உலகம் நம்பும் என்பதை ஒவ்வொருவரும் புரியும் வகையில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“