தனது ஸ்டைலான நடிப்பால் நடிகர் திலகத்தை வியக்க வைத்த ரஜினிகாந்த்; காட்சிகளை நீக்கி விடுவோம் என்ற இயக்குனர்; சிவாஜி கூறியது என்ன?
ரஜினியின் ஸ்டைலான நடிப்பைப் பார்த்து, அசந்தப்போன சிவாஜி இயக்குனரிடம் எந்தக் காட்சியையும் கட் பண்ண வேண்டாம் என்ற கூறிய சுவாரஸ்ய நிகழ்வை இப்போது பார்ப்போம்.
Advertisment
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் ஸ்டைலான நடிப்புக்கு பெயர் பெற்றவர். இருப்பினும் உணர்ச்சிகரமான காட்சிகளாலும் சிறப்பாக நடிக்கக் கூடியவர். இந்த நிலையில், தனது அசத்தலான நடிப்பால் நடிகர் திலகம் சிவாஜி கணேசனையே ரஜினிகாந்த் வியக்க வைத்த நிகழ்வை இப்போது பார்ப்போம். விளரி என்ற யூடியூப் சேனலில் ஆலங்குடி வெள்ளைச்சாமி இந்த நிகழ்வை விவரித்துள்ளார்.
நடிகர் சிவாஜி, உடன் நடிப்பவர்கள் சிறப்பாக நடித்தால் பாராட்டக் கூடியவர். நடிக்க திணறினால், கூப்பிட்டு இப்படி நடியுங்கள் என வழிகாட்டுபவர். இதற்கு எடுத்துக்காட்டு சபாஷ் மீனா திரைப்படம். இதில் சந்திரபாபு உடன் நடித்த சிவாஜி, அவருக்கு அதிக காட்சிகள் இருந்ததை நண்பருக்காக மனதார ஏற்றுக் கொண்டவர்.
அடுத்ததாக திருவிளையாடல் படத்தில் நாகேஷ் நடிப்பை விரும்பினார். தருமி கதாப்பாத்திரத்தில் நாகேஷ் சிறப்பாக நடித்த நிலையில், இயக்குனர் காட்சிகளை குறைக்க நினைத்தப்போது வேண்டாம் என தடுத்தார்.
Advertisment
Advertisements
நான் வாழ வைப்பேன் என்ற படம் 1979ல் வெளிவந்தது. இதில் சிவாஜி, கே.ஆர்.விஜயா, ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் ஒரு இந்தி படத்தின் தழுவல். அமிதாப் பச்சன், ப்ரான் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அமிதாப் கேரக்டரில் சிவாஜி நடித்தார். ப்ரான் நடித்த கேரக்டருக்கு யாரை போடாலாம் என இயக்குனர் யோசித்தப்போது, ரஜினி பெயரை சிவாஜி பரிந்துரைத்தார். ஏனெனில் கடைசியில் வந்தாலும், ஹீரோவிற்கு நிகரான கேரக்டர் அது.
இந்தப் படத்தில் கடைசியில் 20 நிமிடம் மட்டுமே ரஜினி நடித்திருப்பார். இருப்பினும் தனது ஸ்டைலான துறுதுறுப்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். படம் முடியும்போது சிவாஜி ஹீரோவா, ரஜினி ஹீரோ என்று பார்ப்போரை திகைக்கச் செய்யும் அளவிற்கு ரஜினி அசத்தியிருப்பார். படம் ப்ரிவியூ பார்த்த இயக்குனர் யோகானந்த், ஹீரோவாக சிவாஜி நடித்திருந்தாலும், ரஜினி மேலோங்கி தெரிகிறார் என சங்கடப்பட்டு, சிவாஜியிடம் ரஜினியின் காட்சிகளை கட் பண்ணலாமா என்று கேட்டிருக்கிறார்.
இதற்கு சிவாஜி மறுப்பு தெரிவித்து, ரஜினி சிறப்பாக நடிச்சிருக்கான், வளர்ற பையன், எந்தக் காட்சியையும் கட் பண்ண வேண்டாம். அப்படியே இருக்கட்டும் என பெருந்தன்மையாக கூறியிருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“