பழைய க்ளாசிக் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மறு வெளியீடு செய்யப்பட்டு வருகிறது.
Advertisment
அந்த வகையில் தற்போது வசந்த மாளிகை படம் டிஜிட்டலில் வெளியாக தயாராகியிருக்கிறது.
1972-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், இன்று வரை டாப் 10 காதல் படங்களின் வரிசையில் முக்கிய இடம் பிடித்துள்ளது.
இதில் சிவாஜி, வாணிஸ்ரீ, வி.கே.ராமசாமி, குமாரி பத்மினி, சகுந்தலா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கியிருந்த இந்தப் படத்திற்கு, கே.வி.மகாதேவன் இசையமைத்திருந்தார்.
Advertisment
Advertisements
தற்போது இந்தப் படம் நவீன தொழில்நுட்பத்தில் டிஜிட்டலாக மாற்றப்பட்டுள்ளது. 'வசந்தமாளிகை’ படத்தை டிஜிட்டலுக்கு மாற்றி வெளியிடுகிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான வி.சி.குகநாதன்.
தற்போது இதன் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில், சிவாஜியின் மூத்த மகன் ராம் குமார், படத்தில் நடித்த வாணி ஸ்ரீ, பாடகி சுசீலா, இயக்குநர் எஸ்.பி முத்துராமன், தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.