Advertisment
Presenting Partner
Desktop GIF

சிவாஜிக்கு கம்மி சம்பளம் கொடுத்த தயாரிப்பாளர்; படம், பாக்ஸ் ஆபிஸ் ஹிட்; மீதி பணத்தை எப்படி வாங்கினார் சிவாஜி?

குறைவாக சம்பளம் வாங்கிக் கொண்டு நடித்தப் படம் நல்ல வசூல்; லாபத்தோடு சிவாஜியை பார்க்க வந்த இயக்குனர்; சிவாஜி செய்த பெருந்தன்மையான செயல்; சுவாரஸ்ய சம்பவம் இங்கே

author-image
WebDesk
New Update
sivaji ganesan memorial, sivaji ganesan memorial opening on october 1, actor sivaji ganesan

சம்பளம் குறைவாக வாங்கிக் கொண்டு நடித்தப் படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மீதி சம்பளம் கொடுக்க வந்த இயக்குனரிடம் சிவாஜி பெருந்தன்மையாக நடந்துக் கொண்ட சம்பவத்தை இப்போது பார்ப்போம்.

Advertisment

முக்தா சீனிவாசன் இயக்கத்தில், முக்தா பிலிம்ஸ் தயாரிப்பில் நடிகர் சிவாஜி நிறைய படங்களை நடித்தார். நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தார். இந்தநிலையில், முக்தா சீனிவாசன் உதவி இயக்குனர் மகேந்திரன் மூலம் ஒரு கதையை சிவாஜியிடம் கூறினார். கதை சிவாஜிக்கு பிடித்திருந்தது.

பின்னர் சம்பளம் பற்றி பேசுகையில், குறைவான பட்ஜெட்டில் எடுப்பதால் அதிக சம்பளம் தர முடியாது என முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார். உடனே சிவாஜி, அதெல்லாம் பெரிய விஷயமில்லை, நீங்கள் கொடுப்பதை கொடுங்கள் என்று கூறியிருக்கிறார் சிவாஜி. பின்னர் சிவாஜி அப்போது வாங்கிய சம்பளத்தை விட குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டது.

இப்படி எடுக்கப்பட்ட படம் தான் நிறைகுடம். படம் சூப்பர் ஹிட்டானது. அனைத்து பகுதிகளிலும் நல்ல வசூலைக் குவித்தது. இதனால் முக்தா பிலிம்ஸூக்கு நல்ல லாபத்தைக் கொடுத்தது. உடனே முக்தா சீனிவாசன், சிவாஜி வீட்டுக்குச் சென்று ஒரு அறிக்கையை கொடுக்கிறார். அதில் படத்தின் தயாரிப்பு செலவு மற்றும் வசூல் நிலவரம் மற்றும் லாபம் குறித்த தகவல்கள் விரிவாக இடம்பெற்றிருந்தது.

இதனை பார்த்த சிவாஜி, நான் என்ன உன் கம்பெனிக்கு பார்ட்னரா, இது எல்லாம் எனக்கு எதற்கு என்று திரும்பி கொடுக்கிறார். பின்னர் முக்தா சீனிவாசன் அடுத்த கவரை கொடுக்கிறார். அதில் பணம் இருக்கிறது. இது எதற்கு என சிவாஜி கேட்கிறார். அதற்கு படம் நல்ல வசூல். நான் உங்களுக்கு குறைவான சம்பளம் தான் கொடுத்தேன். இன்னைக்கு தேதிக்கு உங்களுக்கு எவ்வளவு சம்பளமோ, அதற்கான மீதித்தொகை இதில் உள்ளது என்று முக்தா சீனிவாசன் கூறியிருக்கிறார்.

ஆனால், சிவாஜி பணத்தை வாங்க மறுத்து, திருப்பி அளித்துவிட்டார். நான் ஒப்புக்கொண்ட சம்பளத்தை வாங்கிவிட்டேன், இது எனக்கு வேண்டாம் என பணத்தை வாங்க மறுத்துவிட்டார். ஆனால் முக்தா சீனிவாசன் நீண்ட நேரம் வற்புறுத்தவே, பணத்தை வாங்கிக் கொண்ட சிவாஜி, இது நிறைகுடம் படத்திற்கான சம்பளம் இல்லை. நீயும் நானும் சேர்ந்து செய்யப்போகும் அடுத்தப் படத்திற்கான அட்வான்ஸ் என்று கூறியிருக்கிறார். இவ்வாறு ரிலாக்ஸ் வித் ராம்ஜி யூடியூப் சேனலில் கூறப்பட்டுள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sivaji Ganesan sivaji Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment