சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ்: ரிலீஸ் ஆன சில மணி நேரங்களில் முழுப் படமும் ஆன்லைனில் லீக்!
காதல் காமெடி என பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பிரின்ஸ் திரைப்படம், திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது
காதல் காமெடி என பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பிரின்ஸ் திரைப்படம், திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது
தீபாவளி தினத்தை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியான பிரின்ஸ் திரைப்படம் ஆன்லைனில் கசிந்துள்ளது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நாயகனாக உயர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன், முதல் முறையாக தெலுங்கில் அறிமுகமாகியுள்ள படம் பரின்ஸ். பிரபல தெலுங்கு இயக்குனர் அனுதீப் கே.வி இயக்கியுள்ள இந்தபடத்தில், மரியா ரியாபோஷப்கா நாயகியாகவும், சத்யராஜ், பிரேம்கி அமரன், கார்ல் ஏ ஹார்டே, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர்.
ஒரு பள்ளியின் ஆசிரியர் அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் ஒரு பிரிட்டிஷ் பெண்ணை காதலிக்கிறார். கிராமத்து பின்னணியில் வெளியாகியுள்ள இந்த படத்தில், கிராமத்தில் உள்ள சாதிய மோதல், மற்றும் நாயகன் அதே சமூகத்தை சேர்ந்த பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று சொல்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினையை தீர்த்து நாயகன் எப்படி தனது பிரிட்டிஷ் காதலியை கரம் பிடித்தார் என்பதுதான் பிரின்ஸ்.
Advertisment
Advertisements
காதல் காமெடி என பொழுதுபோக்கு அம்சம் கொண்ட பிரின்ஸ் திரைப்படம், திரையரங்கில் வெளியான சில மணி நேரங்களிலேயே, ஆன்லைனில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான இணையதள லிங்க் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் படக்குழுவினர் மட்டுமல்லாது சிவகார்த்திகேயன் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.