/indian-express-tamil/media/media_files/bHIEVm5SBnM17dG57uFY.jpg)
நடிகர் சிவகார்த்திகேயன் 3-வது ஆண் குழந்தை பிறந்த தகவலை சமூக வலைத்தளத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
நடிகர் சிவகார்த்திகேயன் - ஆர்த்தி தம்பதிக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்த தகவலை சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதனால், சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி, தமிழ் சினிமா உலகில் இன்று முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், படங்கள் சத்தமில்லாமல் பாக்ஸ் ஆஃபீஸில் வசூலைக் குவித்து வெற்றி பெற்று வருகின்றன.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்திக்கு 3-வது ஆண் குழந்தை பிறந்துள்ள தகவலை சமூக வலைத்தளத்தில் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
#BlessedWithBabyBoy ❤️❤️❤️ pic.twitter.com/LMEQc28bFY
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 3, 2024
இது குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “அனைவருக்கும் வணக்கம், எங்களுக்கு நேற்று இரவு (ஜூன் 2) ஆண் குழந்தை பிறந்திருக்கிறான் என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். ஆர்த்தியும் குழந்தையும் நலம். ஆராதனாவிற்கும் குகனிற்கும் நீங்கள் தந்த அன்பையும் ஆசியும் எங்கள் மூன்றாவது குழந்தைக்கும் தர வேண்டுகிறோம். நன்றி” என அறிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் - ஆர்த்தி ஜோடிக்கு 3வது குழந்தை பிறந்துள்ளதால இவர்களுக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.