கோலிவுட்டை கலக்கும் அப்பா – மகள்…ஆராதனாவை பாடகியாக்கினார் சிவகார்த்திகேயன்!

சிவகார்த்திகேயனின்  மகள் ஆராதனா கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகிறார்.  ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி அசத்தியுள்ளார் ஆராதனா!

சிவகார்த்திகேயன் மகள்
சிவகார்த்திகேயன் மகள் பாடகியானர்

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகன்! சாதாரண நிலையில் இருந்து உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனின்  மகள் ஆராதனா கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகிறார்.  ‘வாயாடி பெத்த புள்ள’ பாடலை பாடி அசத்தியுள்ளார் ஆராதனா!

சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா :

கோலிவுட்டில் டாப் ஹீரோ லிஸ்டில் இடம் பிடித்திருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் ‘கனா’ படம் மூலம் தயாரிப்பாளர் ஆவதாரம் எடுத்துள்ளார். நடிப்பில் பட்டையை கிளப்பி வரும் சிவகார்த்திகேயனின் சீமராஜா படம் ரிலீஸுக்கு ரெடி. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது.

நாளுக்குநாள் ரசிகர்கள் மத்தியில் சிவகார்த்திகேயனின் மவுசு கூடிக்கொண்டே செல்கிறது. ரெமோ படத்திற்கு பிறகு பெண் ரசிகைகளும் சிவாவுக்கு அதிகரித்துள்ளனர். இந்நிலையில் சிவகார்த்தியேகன் தனது செல்ல மகள் ஆராதனாவை கோலிவுட்டில் களம் இறக்குகிறார்.

சிவகார்த்திகேயன் மகள்
மகள் ஆராதனாவுடன் சிவகார்த்திகேயன்

4 வயதாகும் ஆராதனா விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘கனா’ படத்தில் தனது தந்தை சிவகார்த்திகேயன் மற்றும் வைக்கோம் விஜயலட்சுமியுடன் இணைந்து ‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடலை பாடியுள்ளாராம். இதன் மூலம் ஆராதான பாடகியாக கோலிவுட்டில் அறிமுகமாகிறார்.

பிரபல பாடகர், நடிகர் அருண் ராஜா இயக்கும் இப் படத்தில் நடிகை ஜஸ்வர்யா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கு இந்த படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.

தமிழ் சினிமாவுக்கு ஒரு குட்டி பாடகி தயார்!

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sivakarthikeyan daughter on his movie

Next Story
உன் மீது காதல் இருப்பது உண்மை : யாஷிகாவிடம் மகத் ! நறுக்குனு கேள்வி கேட்ட பாலாஜிBIGG BOSS TAMIL 2 MAHAT, பிக் பாஸ் தமிழ் 2
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express