திராவிட ஜீவா, கட்டுரையாளர்
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக கோலேச்சிவரும் ரஜினிக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டாராக விஸ்வரூபம் எடுத்து சீனியர் நடிகர்களை தனது தொடர் வசூல் சாதனைகளால் பின்னோக்கி தள்ளியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் டான் திரைப்படம் ரஜினி படத்துக்கு இணையாக ஒபனிங்கை அதுவும் முன்பதிவிலேயே செய்திருப்பது மற்ற சீனியர் நடிகர்களை மட்டுமல்ல திரைபிரபலங்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் அனைத்து நடிகர்களுக்கும் முதல் காட்சியில் திரள்வது வாடிக்கையான ஒன்றே. ஆனால், அடுத்தடுத்த காட்சிகளுக்கு இன்றைய இணையதள உலகில் விமர்சனத்தை பொருத்தே ஆடியன்ஸ் வருவார்கள். சீனியர் நடிகர்களான சூர்யா, விஜய், அஜித் போன்றவர்களுக்கே இந்தநிலைதான். ரஜினிக்கு படம் சரியில்லை என்று விமர்சனம் வந்தாலும் என்ன ரஜினி படம் சரியில்லையா என்று அதற்காகவே ஆடியன்ஸ் ஒருமுறையாவது பார்ப்பது அவருக்கு கூடுதல் பலம்.
இரண்டாவது காட்சியிலேயே சீனியர் நடிகர்களின் படம் விழுந்துவிடுகின்ற நிலையில் முன்பதிவிலேயே டான் படம் அசுர சாதனை படைத்துள்ளது. ரஜினி படத்துக்கு பிறகு சென்னை ரோகினி திரையரங்கில் முதல்நாள் 20 காட்சிகள் திரையிட்டு அதுவும் முன்பதிவிலேயே ஹவுஸ்புல்லானது சிவகார்த்திகேயன் ஒருவருக்கு தான். இதற்கு முன்பு ரஜினியின் கபாலி, 2.0 படத்துக்கே 20 காட்சிகளுக்கு மேல் முன்பதிவில் ஹவுஸ்புல்லானது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னையில் 348 காட்சிகள் முன்பதிவில் ஹவுஸ்புல் சாதனை படைத்து, அட்வான்ஸ் புக்கிங்கிலேயே காபாலி, 2.0, தர்பார்க்குப் பிறகு 92.74 லட்சம் வசூலித்துள்ளது.
ரஜினியின் கபாலி படம் 849 காட்சிகள் முன்பதிவில் சாதனைபடைத்து 2.69 கோடியை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. ரஜினியின் 2.0 படம் முன்பதிவில் 1.9 கோடியையும் தர்பார் 1.1 கோடியையும் முன்பதிவில் வசூலித்திருந்த நிலையில், ஒரு கோடியை முன்பதிவில் சிவகார்த்திகேயன் நெருங்கியிருப்பது . 40 வருட தமிழ்சினிமாவில் அதிகாரபூர்வமாக ரஜினியை ஒபனிங்கில் நெருங்கிய முதல் நடிகர் சிவகார்த்திகேயன் என்பது கூர்ந்து கவனிக்கப்படவேண்டிய விஷயமாக உள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”