உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்து இருக்கும் குகேஷுக்கு பெரிய அளவில் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அழைத்து பாராட்டி வாட்ச் ஒன்றையும் பரிசளித்துள்ளார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன் போட்டியில் தமிழக வீரர் குகேஷ், சீன போட்டியாளரான லிங்கை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை பெற்றார். இதன் மூலம் 18 வயதிலேயே உலக செஸ் சாம்பியனாகி குகேஷ் சாதனை படைத்துள்ளார்.
சாம்பியன் குகேஷுக்கு பரிசு கோப்பை, பதக்கத்துடன் ரூ.11½ கோடி பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து குகேஷூக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், தமிழக முதலமைச்சர், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினரை நேரில் அழைத்து நடிகர் சிவகார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார். அப்போது செஸ் சாம்பியன் குகேஷுடன் இணைந்து சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் குகேஷை பாராட்டும் விதமாக விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசளித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“