நடிகர் சிவகார்த்திகேயன் இந்த பொங்கலுக்கு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டு அதில் தனது இளைய மகன் பவன்-ஐ ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்திருக்கிறார். சிவகார்த்திகேயன் புதியதாக பிறந்த தனது இளையமகன் பவன் மற்றும் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் 'அமரன்' படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தார். தற்போது இரண்டு பெரிய பட்ஜெட் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
நடிகர் சிவகார்த்திகேயன் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி, மகள் ஆராதனா, மூத்த மகன் தாஸ் மற்றும் இளைய மகன் பவனுடன் பாரம்பரிய உடையில், பொங்கல் பண்டிகையை கொண்டாடிய மகிழ்ச்சியான தருணத்தை வெளிப்படுத்தும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலான இந்த புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் சிவகார்த்திகேயனின் இளைய மகன் பவனுக்கும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தைப் பகிர்ந்த சிவகார்த்திகேயன், “உங்கள் உள்ளங்களிலும், இல்லங்களிலும் மகிழ்ச்சி பொங்கட்டும் பொங்கலோ பொங்கல்!! அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்” என்று அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு முக்கிய படங்களில் நடித்து வருகிறார்.: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் 'எஸ்.கே. 23' மற்றும் சுதா கொங்கரா இயக்கும்'எஸ்.கே. 25' ஆகிய இரண்டு படங்களும் தயாரிப்பில் உள்ளன. 'அமரன்' படத்தின் மகத்தான வெற்றியுடன், சிவகார்த்திகேயன் பெரிய ஸ்டார்களின் வரிசையில் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.