/indian-express-tamil/media/media_files/2025/04/14/HOhZyBj3dujTVmgCgxYB.jpg)
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே அனைவராலும் கொண்டாடப்படும் நட்சத்திரமாக உயர்ந்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் திரைப்படம் 'மதராஸி'. இந்தப் படத்தை பிரபல இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி முதல் முறையாக இணைந்திருப்பதால், ஆரம்பம் முதலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணை முட்டியது.
ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்க, விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் கச்சிதமாகத் தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளது. படத்திற்கு என்றும் துள்ளலான இசையை வழங்குவதில் பேர் பெற்ற அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, பாடல்களும் பின்னணி இசையும் ரசிகர்களைக் கவர்ந்தன.
'மதராஸி' திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப் பல மொழிகளில் ஒரே சமயத்தில் பிரம்மாண்டமாக வெளியானது. படம் வெளியான முதல் நாளிலிருந்தே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன், ரசிகர்களின் ஆரவாரத்தையும் அள்ளியது. சமூகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதைக்களமும், சிவகார்த்திகேயனின் எதார்த்தமான நடிப்பும், ஏ.ஆர். முருகதாஸின் நேர்த்தியான இயக்கமும் படத்திற்குப் பலமாக அமைந்தன. இதன் காரணமாக, இப்படம் திரையரங்குகளில் சுமார் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது சிவகார்த்திகேயனின் கரியரில் மற்றுமொரு மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், 'மதராஸி' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் புத்தம் புதிய ஆக்ஷன் கலந்த என்டர்டெயினர் திரைப்படம் வருகிற அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. திரையரங்குகளில் படம் பார்க்கத் தவறியவர்களும், மீண்டும் பார்க்க விரும்புபவர்களும் இனி தங்கள் வீட்டில் இருந்தே தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை கண்டு ரசிக்கலாம். இதன் மூலம் 'மதராஸி' திரைப்படம் இன்னும் அதிகமான ரசிகர்களைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Brace yourself for a mad ride with yours truly Madharaasi ❤️🔫#MadharaasiOnPrime, Oct 1@SriLakshmiMovie@Siva_Kartikeyan@ARMurugadoss@anirudhofficial@VidyutJammwal#BijuMenon@rukminitweets@actorshabeer@vikranth_offl@SudeepElamonpic.twitter.com/McLGlMBEN4
— prime video IN (@PrimeVideoIN) September 26, 2025
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.