’நான் என்னுடன் தான் போட்டி போடுகிறேன்’ – சிவகார்த்திகேயன் ஓபன் டாக்!

Namma Veetu Pillai Movie: நிகழ்காலத்தை நினைத்து அஞ்சுகிறேன், எனக்கு கிடைத்தவற்றை தக்க வைத்துக் கொள்ள நான் கடுமையாக உழைக்கிறேன்.

By: Updated: October 2, 2019, 05:53:58 PM

எஸ். சுபகீர்த்தனா

Sivakarthikeyan Interview On Namma Veetu Pillai Movie: ஒரு நடிகராக சிவகார்த்திகேயனின் திரை பயணத்தின் முடிவுகள் கவனமாக சிந்தித்து எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அப்படி எதுவும் இல்லை என்று அவர் கூறுகிறார் சிவா. “நான் நடிக்கிற ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களுடன் தொடர்புடையதாக இருக்குமா என்பதை உறுதி செய்கிறேன். எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் யோசிப்பதில்லை. வெறுமனே நிகழ்காலத்தில் கவனம் செலுத்துகிறேன். ஒவ்வொரு நாளும் முன்னேற்றத்தை அதிகரிக்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் நான் செட்டுகளுக்கு வரும்போதும், எல்லோரிடமிருந்தும் கற்றுக்கொள்கிறேன்” எனும் சிவகார்த்திகேயன் புன்னகைக்கிறார்.

அவருடனான உரையாடலை இங்கே குறிப்பிடுகிறோம்…

பாண்டிராஜுடனான உங்கள் கூட்டணியைப் பற்றி?

’மெரினா’வில் இடம்பெற்றிருந்த பல கதாபாத்திரங்களில் நானும் ஒருவன். ’கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில், இரண்டு ஹீரோக்களில் ஒருவன். ”நம்ம வீட்டு பிள்ளை”யில் நான் ‘ஹீரோ’ (சிரிக்கிறார்). மெரினாவில் ஒரு கதாபாத்திரத்திற்காக நான் ஆடிஷனில் பங்கேற்றேன். அதே இயக்குனர் என்னை மனதில் வைத்து ஒரு திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் தயாரித்துள்ளார். எனக்கு இன்னும் வேறு என்ன தேவை? நான் பாண்டிராஜ் சாரை மிகவும் மதிக்கிறேன், வாழ்க்கையின் வட்டம் முழுமையடைந்திருக்கிறது.


ரிலீஸின் போது பதட்டமாக இருந்தீர்களா?

உண்மையிலேயே இல்லை. நாங்கள் ஒரு பக்கா பொழுதுபோக்கு திரைப்படத்தை உருவாக்கினோம். பாண்டிராஜ் சார் இதை சிறப்பாகவே செய்திருந்தார். அவரிடம் பத்து குடும்ப கதைகளை உருவாக்கச் சொல்லுங்கள், அவர் அசராமல் செய்வார். பெரிய கூட்டுக் குடும்பத்திலிருந்து வந்தவர் அவர். ”நம்ம வீட்டு பிள்ளை” ஒர்க் அவுட் ஆகும் என எங்களுக்குத் தெரியும். அதில் உணர்வுப்பூர்வமான தருணங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக கடைசி 15 நிமிடங்களில். ‘உணர்வுகள்’ எப்போதும் திரைப்படங்களில் வெல்லும். ’கனா’ தந்தை – மகள் பாசத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. விஸ்வாசமும் அப்படித்தான். நீங்கள் சில பிரதர்-சிஸ்டர் வீடியோக்களை யூடியூப் செய்துப் பாருங்கள். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளின் திருமணத்தில் அழுவதை காண்பீர்கள். இதையே சினிமாவில் காட்டினால், அது டிராமா-வா? (சிரிக்கிறார்)

Siva Karthikeyan Namma veettu pillai சிவகார்த்திகேயனின் நம்ம வீட்டு பிள்ளை

ஐஸ்வர்யா ராஜேஷை பற்றி?

ஐஸ்வர்யாவும் நானும் ‘கானா’வில் ஸ்டூடெண்ட் – கோச்சாக நடித்தோம். நம்ம வீட்டு பிள்ளையும் அதே மாதிரியான ஸோனில் தான் நடித்தோம். இரண்டு, மூன்று காட்சிகளைத் தவிர, நாங்கள் எதையும் அதிகமாக காட்டவில்லை. சகோதர சகோதரிகள் பெரும்பாலான இடங்களில் தங்கள் பாசத்தை வெளிப்படையாகக் காட்ட மாட்டார்கள். ஒரு சகோதரனாக இந்தப் படம் சொந்த அனுபவங்களுடன் தொடர்பு படுத்திக்கொள்ள எனக்கு உதவி இருக்கிறது. அதோடு ஐஸ்வர்யா ஒரு சிறந்த திரைக்கலைஞர்.

அரும்பொன்னைப் பற்றி?

சில இடங்களில் அவர் சிவகார்த்திகேயன். மீதமுள்ளவற்றில், அவர் பாண்டிராஜ் சார். தந்தை இல்லாமல் வளர்ந்த இந்த பையனைச் சுற்றி நம்ம வீட்டு பிள்ளை கதை நடக்கிறது. அவர் தனது தங்கைக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார் என்பதுதான் கதை. இதில் நிறைய வசனங்கள் என்னுடன் ஒன்றிப்போகும்.

பாரதிராஜா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நடித்த அனுபவம் பற்றி?

இது ஒரு ஆரோக்கியமான அனுபவம். குறிப்பாக, நான் பாரதிராஜா சாரிடம் அவரது குரலில் பேசி காட்டினேன் (சிரிக்கிறார்). அவரது எனெர்ஜி லெவல் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. எனது நடிப்பைப் பற்றி அவர் சொல்ல நல்ல விஷயங்கள் இருந்தன. இது எனக்கு பெருமையான தருணம்.

ஒரு ஹீரோவாக நீங்கள் உயர்ந்திருப்பதைப் பற்றி?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், எனது முதல் படமான மெரினாவில் நடிகராக நடிப்பது சங்கடமாக இருந்தது. டைமிங் சரியாக இருக்கிறதென்று எனக்குத் தெரியும். வசனங்களும் சரியாக இருந்தன.  ஆனாலும் எனக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதை உணர்ந்தேன். மெதுவாக, கால்குலேடட் ரிஸ்க்கை எடுக்கத் தொடங்கினேன். பார்வையாளர்கள் என்னிடமிருந்து எந்த மாதிரியான படங்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை நான் அறிவேன். அவர்களை மகிழ்விக்க விரும்புகிறேன். நான் கனவிலும் காணாத ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.  நிகழ்காலத்தை நினைத்து அஞ்சுகிறேன், எனக்கு கிடைத்தவற்றை தக்க வைத்துக் கொள்ள நான் கடுமையாக உழைக்கிறேன். எனது படங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் மட்டுமே நான் கவனம் செலுத்துகிறேன். என்னுள் எதுவும் பெரிதாக மாறவில்லை. ஒவ்வொரு படத்திலும் நான் அதிக பொறுப்பை உணர்கிறேன், (சிரிக்கிறார்). தவிர, நான் ஒன்றும் பாதுகாப்பற்ற நபர் அல்ல. நான் என்னுடன் மட்டுமே போட்டியிடுகிறேன்.

ரஜினிகாந்த் ரெஃபரென்ஸ் இல்லாமல் நீங்கள் நடிப்பதை நாங்கள் பார்க்க முடியுமா? நம்ம வீட்டு பிள்ளையிலும் ஒன்று இருந்தது.

(சிரிக்கிறார்) அது நிறைய குறைந்துவிட்டது என்று நினைக்கிறேன். ஒரு ஹார்ட்கோர் ரசிகனாக, எனது தொலைக்காட்சி நாட்களில் நான் ரஜினி சாரை அதிகம் பிரதிபலித்தேன். ஆனால் படங்களிலும் அது நடக்கும் என்று ஒருபோதும் திட்டமிட்டதில்லை. எனது மேனரிஸம் ரஜினி ரஜினி சாரைப் போல் இருக்கிறதென்று மக்கள் கூறும்போது, நான் அதை ஒரு பாராட்டாக எடுத்துக்கொள்கிறேன்.

இதை ஆங்கிலத்தில் படிக்க – I only compete with myself: Sivakarthikeyan

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Sivakarthikeyan namma veettu pillai pandiraj

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X