சிவகார்த்திகேயன் புதிய படம்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘இரும்புத் திரை’ படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘சீமராஜா’ படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ் இயக்கத்திலும், ‘நேற்று இன்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் படத்திலும் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு அடுத்ததாக அவர் ‘இரும்புத் திரை’ படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் நடிக்கிறார்.
இதற்கான அறிவிப்பை, ஆர்டி ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
It’s official : In the journey of Making good content and wholesome entertainment, Today with all your blessings and support, We are so happy to announce our Production No:7 with our @Siva_Kartikeyan and @Psmithran ????????????
Other cast & crew will be announced soon..
— RD RAJA (@RDRajaofficial) September 24, 2018
இந்த அறிவிப்பை இயக்குனர் மித்ரனும் உறுதி செய்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் டெக்னீஷியன்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.
விஷாலை வைத்து மித்ரன் இயக்கிய இரும்புத்திரை படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றிப் பெற்றது குறிப்பிடத்தக்கது.