சிவாவுக்கு திருப்புமுனை; ஏ.ஆர். முருகதாஸுக்கு கேரியர் பெஸ்ட்: எஸ்.கே 23 எதிர்பார்ப்பு

முருகதாஸ் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் SK 23 அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினி படத்துக்கு பிறகு மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

முருகதாஸ் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் SK 23 அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினி படத்துக்கு பிறகு மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
 Sivakarthikeyan next film SK23' with AR Murugadoss

சிவகார்த்திகேயனின் வசூல் சாதனை நிலவரங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுவதவே திரையுலககில் கிசுகிசுக்கப்படுகிறது

திராவிட ஜீவா

Sivakarthikeyan | ar-murugadoss | tamil-cinema-update:தமிழ் சினிமாவின் வசூல் சக்ரவர்த்தியான சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு, மேக்சிமம் கேரண்டி வசூல் ஹீரோவாக உருவெடுத்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். ரசிகர்களால் கோலிவுட் "பிரின்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறார். நடிகை சரிதா கூட ஒரு நிகழ்ச்சியில் சிவா ஒரு குட்டி 'ரஜினி' என்றார். அதற்கு இயக்குனர் மிஷ்கின் அவர் குட்டி 'ரஜினி இல்லை; இப்போ ரஜினியே அவர்தான்' என்று குறிப்பிட்டார்.

Advertisment

சிவகார்த்திகேயனின் வசூல் சாதனை நிலவரங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுவதவே திரையுலககில் கிசுகிசுக்கப்படுகிறது. அந்த அளவுக்கு இவரது படங்கள் முன்னணி நடிகர்கள் என்று சொல்லப்படும் நடிகர்களின் படங்களைவிட அதிகமான வசூல் சாதனை செய்வதாகவே உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. திரைப்படங்களை தொடர்ந்து விநியோகம் செய்து வரும் அமைச்சர் உதயநிதியே தற்போதையை தமிழ் சினிமாவின் "டான்" சிவகார்த்திகேயன் தான் என்று சொல்வதெல்லாம் இவரது வசூல் சாதனைகளின் வரலாற்று பக்கத்தில் பதிந்த வரிகள். இவரது படங்களின் வியாபாரம் சர்வ சாதாரணமாக 100 கோடியை தாண்டுவதும் ஒட்டுமொத்த வசூல் 200 கோடியை நெருங்குகிறது.

இந்த சூழலில் இயக்குனர் முருகதாஸுடன் இணைவது மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. SK 23 முருகதாஸ் பிறந்தநாளில் வெளியாகியிருக்கும் இந்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினி படத்துக்கு பிறகு மகிழ்ச்சியுடன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் முருகதாஸ். இது குறித்து இயக்குனர் முருகதாஸ் தரப்பிடம் கேட்டபோது, "இந்த படம் என்னோட கேரியரில் 'தி பெஸ்ட்' என்கிற அளவில் இருக்கும் என்று தெரிவித்தார். அஜித்தின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பத்தை கொடுத்த "தீனா", விஜயகாந்த் அரசியல் பயணத்துக்கு அவருக்கு கை கொடுத்த "ரமணா",  நடிகர் விஜய்ன் திரைப்பயணத்தில் சற்று தொய்வு ஏற்பட்டபோது அவராகவே தனக்கான கதையை தயார் செய்ய சொன்னதாகவும் அந்த "துப்பாக்கி" படமே விஜய்ன் மாஸ் இமேஜை உயர்த்தியது. 

இப்படி  விஜயகாந்த், அஜித், விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு திருப்புமுனையை கொடுத்த முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைவது தமிழ் சினிமாவின் மைல்கல் படமாக இருக்கும் என்பதால் இப்போதே இந்த படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.

Advertisment
Advertisements

தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறhttps://t.me/ietamil

Sivakarthikeyan Ar Murugadoss Tamil Cinema Update

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: