Advertisment

அட்லியை விமர்சிப்பதா? ஷாரூக் கான் பட வசூலை குறிப்பிட்டு புகழும் சிவகார்த்திகேயன்

அட்லி ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்; ஆனால் அட்லியை நாம் கொண்டாட வேண்டும்; காரணங்களை விளக்கும் சிவகார்த்திகேயன்

author-image
WebDesk
New Update
siva and atlee

அட்லி ரசிகர்களால் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்; ஆனால் அட்லியை நாம் கொண்டாட வேண்டும்; காரணங்களை விளக்கும் சிவகார்த்திகேயன்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

நடிகர் சிவகார்த்திகேயன் தனது நண்பரும் இயக்குநருமான அட்லிக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலளித்து உள்ளார்.

Advertisment

சிவகார்த்திகேயன் அடுத்து திரைக்கு வரவிருக்கும் 'அயலான்' படத்தை விளம்பரப்படுத்துவதில் பிஸியாக இருக்கிறார், இதனையடுத்து படம் குறித்த சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்தநிலையில், சமீபத்தில் ஒரு யூடியூப் நேர்காணலில், சிவகார்த்திகேயன் தனது நண்பரும் இயக்குநருமான அட்லியைப் பற்றி மனம் திறந்து பேசி, அட்லிக்கு எதிரான விமர்சனங்களுக்கு பதிலளித்தார். சிவகார்த்திகேயன் அட்லியின் நோக்கத்தை மதிப்பதாகவும், இயக்குனராக அவர் தனது இலக்கை சரியாக அடைந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்குவதாகவும் கூறினார்.

அட்லி ரசிகர்களால் எளிதில் விமர்சிக்கப்படுகிறார், ஆனால் அட்லி வேறு எந்த தென்னிந்திய சினிமாவில் இருந்திருந்தாலும், நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டிருப்பார் என்று சிவகார்த்திகேயன் கூறினார்.

"ஷாருக்கானுடன் ஒரு படம் செய்து ரூ. 1200 கோடி பாக்ஸ் ஆபிஸ் படத்தை வழங்குவது எளிதான வேலை அல்ல; பல பிரபலமான இயக்குனர்கள் கூட அதைச் செய்யத் தவறிவிட்டனர்" என்று அட்லீக்கு சிவகார்த்திகேயன் ஆதரவு தெரிவித்தார். அட்லியின் ஒவ்வொரு படத்திலும் அவரது வளர்ச்சி உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், சிவகார்த்திகேயன் அவரது முயற்சியைப் பாராட்டுகிறார். விஜய்யுடன் அட்லீயின் மேஜிக்கைப் பாராட்டிய சிவகார்த்திகேயன், இயக்குனரின் தவறை ஏற்று அவரது முயற்சியைப் பாராட்டுமாறு ரசிகர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அட்லிக்கு சிவகார்த்திகேயனின் பாராட்டுக்கள் இயக்குனரின் வெற்றிக்கு உரித்தான ஒன்றாக மாறியுள்ளது. இதனால், கோலிவுட்டின் சிறந்த பொழுதுபோக்கு இயக்குனர்களில் ஒருவரான அட்லியை ரசிகர்கள் பாராட்டத் தொடங்கினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Sivakarthikeyan Atlee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment