Advertisment

புதுச்சேரி அரசின் திரைப்பட விருது: சிறந்த படமாக குரங்கு பெடல் தேர்வு!

கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியான குரங்கு பெடல் திரைப்படம் புதுச்சேரி மாநில அரசின் கடந்த 2022-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் பட்டியலில் தேர்வாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Kurangu Pedal

புதுச்சேரி அரசின் 2022ம் ஆண்டிற்கான சிறந்த படமாக நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்த ‘குரங்கு பெடல்’ தேர்வு செய்யப்பட்டுள்ளது

Advertisment

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் குரங்கு பெடல். ராசி அழகப்பன் எழுதிய ‘சைக்கிள்’ என்ற சிறுகதையை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தை கமலக்கண்ணன் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் இவர் ‘வட்டம்’ மற்றும் ‘மதுபான கடை’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். காளி வெங்கட் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள குரங்கு பெடல் படத்திற்கு ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படம் கடந்த மே மாதம் 3ம் தேதி வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்தப் படம் புதுச்சேரி மாநில அரசின் கடந்த 2022-ம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் பட்டியலில் தேர்வாகியுள்ளது. வருகிற அக்டோபர் 4ம் தேதி திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் இயக்குநர் கமலக்கண்ணணுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி விருது வழங்குகிறார்.

இது குறித்து புதுச்சேரி செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பாக வருகின்ற அக்டோபர் பாதம் திங்கள் 4ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணியளவில், இந்திய திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சியும், 2022ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும், புதுச்சேரி, ஒயிட் டவுன்,  சுய்ப்ரேன் வீதி, அலையன்ஸ் பிரான்சேஸ் கலையரங்கத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை நவதர்ஷன் திரைப்படக்கழகம் மற்றும் அலையன்ஸ் பிரான்சேஸ் இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா 2023 நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் ந.ரங்கசாமி விழாவினைத் தொடங்கி வைத்து 2022 - ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கான சங்கரதாஸ் சுவாமிகள் விருதினை ‘குரங்கு பெடல்” தமிழ்த் திரைப்பட இயக்குநர்  எஸ்.கமலக்கண்ணனுக்கு வழங்குகிறார். பொதுப்பணி அமைச்சர் க.லட்சுமிநாராயணன், அரசு செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) ஆர்.கேசவன்,  செயலர், நவதர்ஷன் திரைப்படக்கழகம் டாக்டர் எம். பழனி,  தலைவர், அலையன்ஸ் பிரான்சேஸ், டாக்டர் சதீஷ் நல்லாம்,  ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர். இந்திய திரைப்பட விழாவை முன்னிட்டு திரைப்படங்கள் பொதுமக்களுக்காக இலவசமாக திரையிடப்படும் என்று கூறியுள்ளார். 

திரையிடப்படும் திரைப்படங்கள்

04-10-2024 குரங்கு பெடல் -தமிழ்

05.10.2024 ஆர்.ஆர்.ஆர். -தெலுங்கு

06.10.2024 அரியிப்பு - மலையாளம்

08.10.2024 டோனிக் மேஜர் – வங்காளம், பெங்காலி, இந்தி ஆகிய படங்கள் இலவசமாக காண்பிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment