/indian-express-tamil/media/media_files/2025/05/13/rPCF5orLg1A3kBE4ZzyF.jpg)
தனியார் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோவில் நடிகர் சிவகார்த்திகேயனிடம் ஒரு சிறுவன் எழுப்பிய கேள்வி எல்லோரையும் சிரப்பலையில் ஆழ்த்தியது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் மிமிக்ரி கலைஞராக நுழைந்து, தொகுப்பாளராக உயர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உருமாறி இருப்பவர் சிவகார்த்திகேயன்.
இதனால், சிவகார்த்திகேயனுக்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது. குறிப்பாக, அண்மையில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன், அமரன் போன்ற திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனிடையே, கொட்டுக்காளி என்ற மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படத்தையும் சிவகார்த்திகேயன் தயாரித்தார். இப்படத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்திற்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாடல் போட்டி தொடர்பான ரியாலிட்டி ஷோவின் இறுதிப் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்தியேன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது, சுவாரசியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
இந்த நிகழ்ச்சியில் புவனேஷ் என்ற சிறுவன் கலந்து கொண்டான். அப்போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அச்சிறுவன் சிவகார்த்திகேயனிடம் எழுப்பிய ஒரு கேள்வி அனைவரிடத்திலும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதன்படி, "சார், உங்ககிட்ட விஜய் சார் துப்பாக்கி கொடுத்துட்டு போனாரே அந்த துப்பாக்கியை எப்போ எனக்கு தர போறீங்க?" என்று கேள்வி எழுப்பினான். இதனால், சிவகார்த்திகேயன் உள்பட அரங்கத்தில் இருந்த அனைவரும் அதிர்ந்து சிரித்தனர்.
சட்டென சுதாரித்த சிவகார்த்திகேயன், "என்கிட்ட இருக்கும் துப்பாக்கி பெருசா இருக்கும். அதை நீ வளர்ந்த பின்னர் உன்னிடம் தருகிறேன்" என்று பதிலளித்தார். சிறுவனின் சுட்டித் தனமான கேள்வியும் அதற்கு சிவகார்த்திகேயனின் சாதுர்யமான பதிலும் அனைவரையும் மகிழ்ச்சி அடையச் செய்தது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.