தமிழ் சினிமா உலகில் அடுத்த உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ள நடிகர் சிவகார்த்திகேயேன் திடீரென சென்னை தாம்பரம் மேம்பாலத்தின் மீது ஏறி நின்றதைப் பார்த்த ஏராளமான மக்கள் கூட்டமாகத் திரண்டதால் அங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றி வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட, அமரன் திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ரஜினி, கமல், அஜித், விஜய் படங்களுக்கு அடுத்து சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் அதிக வசூலைக் குவித்துள்ளது. இதனால், தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ள சிவகார்த்திகேயன்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேய திடீரென சென்னை தாம்பரத்தை அடுத்துள்ள மேம்பாலத்தில் ஏறி நிற்பது போன்ற வீடியோ வெள்ளிக்கிழமை சமூக வலைத்தளங்களில் வைரலானது. தாம்பரம் மேம்பாலத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஏறி நிற்பதைப் பார்த்த அப்பகுதி சென்ற ஏராளமான பொதுமக்கள் கூட்டமாகக் கூடியதால் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்த படத்தில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு சென்னை தாம்பரம் அடுத்துள்ள சதானந்தபுரம் பகுதியில் நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில்தான், நடிகர் சிவகார்த்திகேயன் வெள்ளிக்கிழமை காலை முதல் சதானந்தபுரம் பகுதியில் புதியதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தில் இருந்து சிவகார்த்திகேயன் கீழே குதிக்கும் காட்சியைப் படமாக்கியுள்ளனர். இந்த காட்சியைப் படமாக்கும்மும்போதுதான் நடிகர் சிவகார்த்திகேயன் பாதுகாப்பு கயிறுகளுடன் மேம்பாலத்தின் மேல் ஏறி நின்றுள்ளார். அப்போது அங்கே இருந்தவர்கள் எடுத்த வீடியோதான் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் பாதுகாப்பு கயிறுகளுடன் தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதிக்கும் காட்சி ஷூட்டிங் நடத்தப்படுவதைக் கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அந்த வழியே சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் என பொதுமக்கள் பலரும் கூடியதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் மெல்லமாகவே அப்பகுதியைக் கடந்து செல்வதால் நெடுங்குன்றம், வண்டலூர், ஆலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமரன் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படத்திலும், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். மேலும், டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கராவின் புறநானூறு உள்ளிட்ட படங்களிலும் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“