குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் ’மோஸ்ட் ஃபேவரிட்’ நடிகராகிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் ஆகிய படங்களின் இயக்குநர், எம்.ராஜேஷின் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு ’மிஸ்டர் லோக்கல்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
Advertisment
இதில் நயன்தாரா, ராதிகா சரத்குமார், தம்பி ராமையா, யோகி பாபு, சதீஷ், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய சப்போர்டிங் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். மிஸ்டர் லோக்கல் படத்திற்கு இசை, ஹிப்ஹாப் தமிழா ஆதி. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.
இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு, மிஸ்டர் லோக்கல் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம், வரும் மே 1-ம் தேதி ரிலீஸாகிறது.
Advertisment
Advertisements
தவிர, மிஸ்டர் லோக்கல் டீசருக்கு லைக் பட்டனை அழுத்தி, தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகிறார்கள் சிவகார்த்திகேயன் ரசிகர்கள்.
ஆனால் டீசரில் நயன்தாராவைப் பார்க்கும் போது மன்னன் விஜயசாந்தியும், வி.ஐ.பி 2 கஜோலும் கண்முன் வருவதை தான் தவிர்க்க முடியவில்லை.