ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘அமரன்’. இப்படம் அக்.31 தீபாவளி தினத்தில் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாக நடித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். உலகளவில் கிட்டதட்ட 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் படம் வெளியாகினது. படம் வெளியாகி ரசிகர்கள், மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வசூல் குவித்து வருகிறது. இந்நிலையில், அமரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறி நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் ரசிகர்களுக்கு படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன் தனது X பக்கத்தில், "அன்புள்ள உலகநாயகன் கமல்ஹாசன் சார், படம் வெளியான நாள் அன்று தொலைபேசியில் அழைத்து மிக மிக மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிவித்த பொழுது ஆரம்பித்தது இந்த அமரன் வெற்றி. உங்கள் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் வாழ்த்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி சார்" என்று பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“