நான் இப்படி ஆனதற்கு காரணமே சிவகார்த்திகேயன் தான்.. இமான் உருக்கம்!

சிவகார்த்திகேயனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்

இசையமைப்பாளர் டி. இமான் தனது உடல் எடை இருமடங்காக குறைத்திருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது யார்? என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார்.

இமான் சீக்ரெட் ஆஃப் சக்சஸ்:

இசையமைப்பாளர் இமான் தமிழ் சினிமாவின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவர். இவரின் இசையில் வெளிவரும் பாடல்கள் கண்டிப்பாக  அந்த  வருடத்தின் டாப் லிஸ்டில் இடம் பெற்று விடும்.  தற்போது அஜித்தின் விஸ்வாசம் படத்தின் இசையமைப்பாளரும் இவர் தான்.

அஜித்தின் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்  விஸ்வாசம் பாடல்களை இரவு, பகலாக  உருவாக்கி வருகிறார்.  கடந்த சில மாதங்களாக இமானின்  உடல்பருமனை இருமடங்காக குறைத்து  கோலிவுட்டில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்.

விருது விழாக்கள், இசை வெளியீட்டு விழா என எங்கு சென்றாலும்,  அவரிடம் கேட்கப்படும் ஒரே கேள்வி, எப்படி உடல் எடையை குறைத்தீர்கள்?   சீக்ரெட்டை சொல்லுங்கள் என்பது தான். இதற்கான  பதிலை தற்போது போட்டு உடைத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்தியேகனின் அறிவுரையை கேட்டு , அவரின் டிப்ஸ்களை  ஃபாலோ செய்து தான் இவ்வளவு உடல் எடையை குறைத்ததாக  அவர் கூறியுள்ளார்.  இதற்காக சிவகார்த்திகேயனுக்கு கடமைப்பட்டிருக்கிறேன் என இமான் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close