கமல்ஹாசன் தயாரிப்பில் தான் நடித்து வரும் எஸ்.கே 21 படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன், உடல் எடையை அதிகரித்து ஃபிட்டாக காட்சியளிக்கு வீடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராக உயர்ந்த சிவகார்த்திகேயன், நடிப்பில் பொங்கல் தினத்தில் வெளியான அயலான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
ராணுவ பின்னணி கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் முடிவடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே இந்த படத்தின் டைட்டில் வெளியீட்டுக்கான டீசர் ராஜ்கமல் நிறுவனம் நேற்று வெளியிட்டது. சிவகார்த்திகேயன் வித்தியாசமாக இருக்கும் இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.
சதாரணமாக ஒரு முன்னணி நடிகர் தான் நடித்து வரும் படத்திற்கு ஏற்றபடி உடலமைப்பை மாற்றி நடிப்பது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு. அதே சமயம் இன்றைய காலக்கட்டத்தில் இந்த நிகழ்வு ஒரு ட்ரெண்டாக மாறி வருகிறது. பாகுபலி மற்றும் பிற பான்-இந்திய திரைப்படங்களில் நடித்த நடிகர்கள் அல்ட்ரா-ஃபிட் ஆகி நடித்திருந்தனர். இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.
அந்த வரிசையில் தற்போது சிவகார்த்திகேயனும் இணைந்துள்ளார். ரங்கூன் படத்தின் மூலம் அறியப்பட்ட ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இந்த படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்ட ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தங்களது எக்ஸ் பக்கத்தில், சிவகார்த்திகேயன் தான் நடித்து வரும் கேரக்டருக்கு மிகவும் பொருத்தமாக மாறுவதற்கு எப்படி உழைத்தார் என்ற வீடியோ பதிவை வெளியிட்டுள்ளது.
"கடின உழைப்பு இருந்தால் எதுவும் "முடியும்" என்ற மனப்பான்மை இப்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள சிறந்த சொத்து...#HeartsonFire." க்ளிப்புடன், படத்தின் டீஸர் மற்றும் அதன் டைட்டில் பிப்ரவரி 16 அன்று வெளியிடப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தால், சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாகவோ அல்லது போலீஸ்காரராகவோ நடிப்பது போல் தெரிகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் தவிர சாய் பல்லவி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப்படத்தில் நடித்து வரும்கமல்ஹாசன் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடித்து வரும் படத்தை தயரித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“