Advertisment

40 வயதில் திருமணம் முடித்த எஸ்.ஜே சூரியா பட நடிகை; எப்படி இருக்காங்க பாருங்க; போட்டோஸ் வைரல்!

எஸ்.ஜே. சூரியா படத்தின் கதாநாயகி நடிகை நிலா தனது 40 வயதில் திருமணம் முடித்திருக்கிறார். அவருடைய திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
Meera Chopra

பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரிலேயே நடித்து வந்த நடிகை நிலா, கடந்த 3 ஆண்டுகளாக ரஷீத் என்பவரைக் காதலித்து வந்தார். Photo Source: Instagram

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

எஸ்.ஜே. சூரியா இயக்கி நடித்த  ‘அன்பே ஆருயிரே’ படத்தின் கதாநாயகி நடிகை நிலா 40 வயதில் திருமணம் முடித்திருக்கிறார். அவருடைய திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisment

இயக்குனர் எஸ்.ஜே சூரியா வாலி, குஷி போன்ற படங்களை இயக்கியதைத் தொடர்ந்து, நியூ படத்தை இயக்கி நடித்து ஒரு பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொடுத்தார். இதைத் தொடர்ந்து, எஸ்.ஜே. சூரியா இயக்கி நடித்த படம்தான் அ... ஆ.. என்கிற  ‘அன்பே ஆருயிரே...’ படம். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை நிலா. குறும்புத் தனமாக, க்யூட்டான நடிப்புக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

meera chopra 3

அதிலும்,   எஸ்.ஜே. சூரியாவின் ‘அன்பே ஆருயிரே...’ படத்தில் இடம்பெற்ற ‘மயிலிறகே மயிலிறகே வருடுகிறாய் என்னை’ என்ற பாடலில் வரும் நடிகை நிலாவை ரசிகர்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள். 

தமிழ் சினிமாவில் அன்பே ஆருயிரே படத்தைத் தொடர்ந்து, அர்ஜுன் நடித்த மருதமலை படத்தில் ஜோடியாக நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். ஆனால், தமிழ் சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால், நடிகை நிலா பாலிவுட்டுக்கு சென்றார். அவர் தமிழில் இறுதியாக கில்லாடி என்ற படத்தில் நடித்திருந்தார்.

meera chopra 3

நடிகை நிலா, பாலிவுட்டில் மீரா சோப்ரா என்ற பெயரில் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். நடிகை நிலா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் நடித்துள்ளார். 

தமிழ் சினிமா உலகில் நிலா என்று அழைக்கப்பட்டலும் அவருடைய உண்மையான பெயர் மீரா சோப்ரா. இவர் நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவினர் ஆவார். 

பாலிவுட் படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரிலேயே நடித்து வந்த நடிகை நிலா, கடந்த 3 ஆண்டுகளாக ரஷீத் என்பவரைக் காதலித்து வந்தார். நிலா என்கிற மீரா சோப்ரா 40 வயதானாலும் திருமணம் செய்யாமல் தள்ளிப்போட்டு வந்த நிலையில், கடந்த மாதம் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார். 

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு பிரபலமான ரிசார்ட் ஒன்றில் மீரா சோப்ரா மற்றும் ரஷீத்தின் திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றுள்ளது. மீரா சோப்ரா தனது 40 வயதில் காதலர் ரஷீத்தை திருமணம் செய்துள்ளார். மீரா சோப்ரா தனது திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மீரா சோப்ரா - ரஷீத் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் வைரலாகி வருகிறது. இனிமேல் மகிழ்ச்சி, சண்டை, சிரிப்பு, கண்ணீர் மற்றும் நினைவுகள் தன்னுடைய வாழ்க்கையில் அதிகமாக இருக்கும் என மீரா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

காதலரை கரம்பிடித்திருக்கும் கோலிவுட்டின் நிலா, பாலிவுட்டின் மீரா சோப்ரா திருமணப் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bollywood
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment