எஸ்.ஜே.சூர்யா நடிப்பு மற்றும் திரைப்படங்களை இயக்குவதன் மூலம் வந்த வருவாய் குறித்து கணக்கு காட்டவில்லை என்று கூறிய வருமானவரித்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்தது.
தனக்கு எதிரான வருமான வரித்துறை வழக்குகளை ரத்து செய்யக்கோரி நடிகர் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார். வருமான வரித்துறை கடந்த 2015ல் பதிவு செய்த வழக்குகளை எதிர்த்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு எதிரான வருமான வரித்துறை வழக்குகளை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.