தனுஷ் இயக்கி வரும் 3-வது படமாக நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற படத்திற்கு வாழ்த்து தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா, தனுஷுன் இயக்கம் குறித்து பாராட்டி பேசியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க : SJ Suryah heaps praise on Dhanush: ‘Super director…D50 is Vera level’
சினிமாவில் சிறுசிறு கேரக்டரில் நடித்து பின்னாளில் இயக்குனராக மாறி, தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்துள்ளவர் எஸ்.ஜே.சூர்யா. வாலி, குஷி என வெற்றிப்படங்களை கொடுத்த இவருக்கு, சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் நடிகராக பெரிய வரவேற்பை கொடுத்தது.
தற்போது இந்தியன் 2, கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா தனுஷின் 50-வது படத்திலும் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதுவும் வெளியாகவில்லை என்றாலும், தற்போது தனுஷின் இயக்கம் குறித்து எஸ்.ஜே.சூர்யா பாராட்டி பேசியுள்ளது அவர் அந்த படத்தில் நடித்துள்ளதை உறுதி செய்துள்ளது.
தனுஷ் தனது 50-வது படமாக டி50 படத்தை தானே இயக்கி நடித்து வரும் நிலையில், இந்த படத்தை சன்பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு பின் தனுஷ் தனது இயக்கத்தில் உருவாகும் 3-வது படம் குறித்து சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்த படத்தின் பெயர் ‘’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’’ என்று அறிவித்துள்ளார்.
இந்த படத்திற்கு வாழ்த்து சொல்லும் விதமாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள எஸ்.ஜே.சூர்யா, “அவரு சூப்பர் டைரக்டரும் கூட. தனுஷ்-கு டைரக்ஷன் மேல என்ன வெறி, என்ன டெடிகேஷன் அவரது டி50 திரைப்படம் வித்தியாசமான கதைக்களம், அனைவருக்கும் வித்தியாசமான ஒரு ட்ரீட்மெண்டாக இருக்கும். சர்வதேச வெளியீடு! நீக் டூ ஆல் தி பெஸ்ட்” என்று பதிவிட்டுள்ளார்.
பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள தனது கேப்டன் மில்லர் படத்திற்காக தனுஷ் தான் இயக்கி நடித்துள்ள டி50 திரைப்படம் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார் என்று கூறப்படுகிறது. இதனிடையே தனுஷ் தற்போது இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தில், அனிகா சுரேந்தர், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், பவிஷ், ரம்யா மற்றும் வெக்னி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
தெலுங்கில் நல்ல வரவேற்பை பெற்ற வாத்தி திரைப்படம் தமிழில் பெரிதாக வரவேற்பை பெறாத நிலையில், தனுஷுக்கு இந்த ஆண்டு வெற்றி கிடைக்கவில்லை. அதனால் அவரது ரசிகர்களுக்கு, அருண் மாதேஷ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“