/tamil-ie/media/media_files/uploads/2018/10/d510.jpg)
monster sj suryah film
எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கியவர் நெல்சன் வெங்கடேசன். அப்படத்தைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள ‘மான்ஸ்டர்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தை 'மாயா', ‘மாநகரம்’ படங்களைத் தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்தில், முக்கியக் கதாபாத்திரத்தில் எலி ஒன்று நடித்துள்ளது. அது சம்பந்தப்பட்டக் காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. அதில், எஸ்.ஜே.சூர்யா எலியைத் தன் கண்களை உருட்டி பயங்கரமாகப் பார்ப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
Veralevel excited sir congrats
Sure shot all age film @iam_SJSuryah#Monsterhttps://t.co/5fpXM0F4k7
— atlee (@Atlee_dir) 23 October 2018
இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா தனது ட்விட்டரில் கேலியாக, "பல 'புலி'களோட நடிச்ச என்ன 'எலி'யோட நடிக்க வச்சு இருக்காங்க. ஆனா, இந்த 'எலி' தான் எதிர்காலத்துல என்ன ஒரு 'புலி' ஆக்கப் போகுது" என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.