scorecardresearch

SK16: 2 ஹீரோயின்களுடன் டூயட் பாட ரெடியான சிவகார்த்திகேயன்!

காமெடியன்களாக சூரி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

SK16BySunPictures, Sivakarthikeyan

 : நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ’மிஸ்டர் லோக்கல்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

இயக்குநர் எம்.ராஜேஷ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் 17-ம் தேதி வெளியாகிறது.

அடுத்ததாக சிவகார்த்திகேயனின் 14-வது படத்தை இயக்குநர் ரவிக்குமாரும், 15-வது படத்தை இயக்குநர் மித்ரனும் இயக்குகிறார்கள். இதற்கு ‘ஹீரோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகார்த்திகேயனின் 16-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

இதனை இயக்குநர் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தைப் பற்றிய மற்ற விபரங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதாவது படத்தின் இசையமைப்பாளராக டி.இமான், ஹீரோயின்களாக ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் அனு இம்மானுவேல் (துப்பறிவாளன் பட ஹீரோயின்), காமெடியன்களாக சூரி மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் நட்டி மற்றும் ஆர்.கே.சுரேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Sk16 sivakarthikeyan aishwarya rajesh anu emmanuel sun pictures