sneha adimurai practice video in pattas movie dhanush - பட்டாஸில் சினேகா எனர்ஜிக்கு இதுதான் காரணம் - ஒரு நடிகைக்கான பெஸ்ட் டெடிகேஷன் இதுதான் (வீடியோ)
பொங்கலுக்கு வெளியான தனுஷின் பட்டாஸ் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று ஓடி வருகிறது. எனினும், விடுமுறை காலம் என்பதால் தியேட்டர்களில் கூட்டம் கூடுகிறது.
இப்படத்தின் கதை கிட்டத்தட்ட 'ஏழாம் அறிவு' படத்தை போன்றே உள்ளது என்று விமர்சிக்கப்பட்டாலும் தனுஷ் மற்றும் சினேகாவின் நடிப்பு ரசிகர்களாலும் சரி, விமர்சகர்களாலும் வெகுவாக பாராட்டப்படுகிறது.
அந்த அளவுக்கு தனுஷும், சினேகாவும் சிறப்பாக நடித்துள்ளனர். பட்டாஸ் படத்தில் அடிமுறை கலையில் வல்லவராக தனுஷ் நடித்துள்ளார். அந்த படத்திற்காக சினேகா அடிமுறை கலையை கற்றுள்ளார்.
சினேகா அடிமுறை கலையை பயிற்சி செய்தபோது எடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஒரு படத்தில் நடித்தால் 100 சதவீத ஈடுபாட்டுடன் நடிக்க வேண்டும் என்று நினைப்பவர் சினேகா. அது அந்த வீடியோவில் தெரிகிறது.