நடிகை சினேகாவின் மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகைகள், சினிமா பிர்பாலங்கள் கலந்துகொண்டு வாழ்த்திய புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் 2000-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டார். சினேகா – பிரசன்னா தம்பதிக்கு விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்ற மகளும் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, சினேகா திரைப்படங்களில் அரிதாக நடிக்கிறார். டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

நடிகை சினேகா தன்னுடைய மகன் மற்றும் மகளின் பிறந்தநாளை நண்பர்கள் உடன் பெரிய அளவில் கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சினேகா தனது குழந்தைகளின், பிறந்தநாளின் போது, முதியோர் மற்றும் ஆசிரமத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு உதவிகள் செய்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை சினேகா தன்னுடைய மகள் ஆத்யந்தா பிறந்தநாளை ஆசிரமத்தில் குழந்தைகளுடன் கொண்டாடிய வீடியோ ஒன்றை புதனிழாமை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

இதை தொடர்ந்து, சினேகா தனக்கு மிகவும் நெருக்கமான தோழிகள், மற்றும் சினிமா பிரபலங்களுக்கு பிரமாண்ட பார்ட்டி வைத்து மகள் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நடிகை சினேகா தன்னுடைய மகள் ஆத்யந்தா பிறந்தநாள் கொண்டாட்ட பார்ட்டியில்… விஜயகுமாரின் மகள் அனிதா, ப்ரீத்தா, நடிகர் அசோக் உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் குடும்ப நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த புகைப்படங்களில் சினேகா தன்னுடைய மகளுக்கு மேட்சிங்காக பர்பிள் நிற உடை அணிந்திருக்கிறார். பிரசன்னா மற்றும் மகன் விகானும் கிரே நிற ஷர்ட் அணிந்துள்ளனர். சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக் மழை பொழிந்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“