Advertisment

‘நாங்க அப்பா அம்மா ஆகப்போறோம்’ கவிஞர் சினேகன் - கன்னிகா ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை!

“நாங்க அப்பா அம்மா ஆகப்போறோம், உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதியர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

author-image
WebDesk
New Update
snekan kannika couple

கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதியர் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

“நாங்க அப்பா அம்மா ஆகப்போறோம், உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்” என்று கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதியர் சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளனர். கவிஞர் சினேகன் - கன்னிகா தம்பதியர் தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

Advertisment

தமிழ் சினிமாவில் பல நல்ல பாடல்களை எழுதியவர் கவிஞர் சினேகன், கவிஞர் பாடலாசிரியர், நடிகர் என பன்முகத் திறமை கொண்ட சினேகன், பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகப் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார். 

சினிமா, சின்னத்திரையில் மட்டுமல்லாம, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து, முக்கிய பொறுப்பில் உள்ளார். கவிஞர் சினேகன் - நடிகை கன்னிகாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்தை கமல்ஹாசன் தான் நடத்தி வைத்தார்.

இந்நிலையில் கன்னிகா கர்ப்பமாக இருக்கிறார் என்று சினேகன் - கன்னிகா தம்பதி மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

சினேகன் - கன்னிகா தம்பதியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நாங்க அப்பா அம்மா ஆகபோறோம்....
உங்கள் எல்லோருடைய அன்பும் வாழ்த்தும் வேண்டும்.

அன்புடன்
சினேகன்
கன்னிகா சினேகன்” என்று அறிவித்துள்ளனர்.

கன்னிகா கர்ப்பமாக இருக்கிற ஹாப்பி நியூஸ் சொன்ன சினேகன் - கன்னிகா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Lyricist Snekan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment